அன்பைப் பகிர்ந்திட ஒரு கணித வழி

அன்பைப் பகிர்ந்திட பலவழிகள் இருப்பினும், இது கணிதம் சார்ந்த வழி. உங்கள் பொதுவான நண்பர்களுக்கோ, கணிதம் சார்ந்த நண்பர்களுக்கோ கூட அனுப்பலாம். https://www.desmos.com/mathogram  என்ற இணைப்பில் இதற்கான வழி உள்ளது. இங்கு படத்திலுள்ளவாறு வரைபடத்தாளில் பல இதய வடிவங்கள் கணித சமன்பாடுகளின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. நீங்கள் சமன்பாட்டின் a இன் மதிப்பினை அருகில் உள்ள சிலைடரின் மூலம் நகர்த்த ஆரம்பித்தால் வரைபடத்தாளில் இதயங்கள் நடனமாடுவது போன்ற கண்கவர் காட்சியை கண்டுகளிக்கலாம். இங்கு சொடுக்கவும். நீங்கள் சமன்பாடுகளில் மாற்றம்…

அனைவர்க்கும் அறிவியல் – பிபிசியின் தமிழ் ஒலிக்கோர்வைகளை பதிவிறக்க

பிபிசி தமிழோசை பிபிசியின் உலகசேவையிலிருந்து வழங்கப்படும் தமிழோசை வானொலி நிகழ்ச்சிக்கு அறிமுகம் தேவையில்லை. செய்திகளின் தரத்தாலும், தமிழ் உச்சரிப்பிற்காகவும் அந்த செய்தியறிக்கைக்கான நேயர்கள் ஏராளம். நேரடியாக வானொலி நிகழ்ச்சியை கேட்க முடியாவிட்டாலும் பிபிசியின் தமிழ் இணைய தளத்தில் எப்போது வேண்டுமானாலும் நிகழ்ச்சியை கேட்டு மகிழ முடிகிறது. அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சி தமிழோசை நிகழ்ச்சியில் வாரம் ஒரு முறை அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அநேகமாக தமிழில் அறிவியல் செய்திகளை முந்தித் தருவது அந்நிகழ்ச்சியாகவே இருக்கும். பிபிசி…

மாணவர்களுக்கென்று ஒரு நாட்காட்டி

Calendar for Student தினசரி நாம் காலண்டர்களை பார்க்கிறோமோ இல்லையோ, அவை நம் வீட்டில் வருடந்தோறும் இடம் பிடித்து விடுகின்றன. சிலருக்கு அதில் உள்ள தினசரி ராசிபலன்களைப் பார்ப்பதே காலையில் முதல் வேலை. இன்னும் சிலருக்கு அதில் உள்ள பொன்மொழிகளைப் படிக்க விருப்பம். இன்னும் சிலர் வீடுகளில் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு நாட்கள் கிழிக்கப்படாமலோ, அல்லது மாதங்கள் திருப்பப்படாமலோ இருக்கும். ஆனாலும் எப்படியோ காலண்டர்கள் இல்லாத வீடுகள் இல்லை. காலண்டர்களுக்கான சாத்தியங்கள் பல. சுவரில் தொங்குகின்ற…

பத்தாம் வகுப்பு – அறிவியல் – வெற்றியை உறுதி செய்யும் முக்கிய வினாக்கள்

இந்த கையேடு தமிழகப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அறிவியல் பாடத்தில் வெற்றியை உறுதிசெய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. நிறைய மதிப்பெண்கள் பெறுவதற்கும் இக்கையேடு துணைபுரியும். முக்கிய மற்றும் முந்தைய அரசுத்தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் தொகுக்கப்பட்டு உள்ளன. தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்காக இக்கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் இரு மதிப்பெண் வினாக்கள் எல்லாப் பாடங்களுக்கும் தரப்பட்டுள்ளது. ஐந்து மதிப்பெண் வினாக்கள் முக்கிய பாடங்களுக்கு தரப்பட்டுள்ளன. அவசியம் இக்கையேட்டைப் படியுங்கள். உங்கள் வெற்றியை உறுதி செய்யுங்கள்.…

வேறெங்கே நான் செல்ல?…

அனைவருக்கும் நமது வலைப்பதிவின் சார்பாக தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். பட்டாசுகளைத் தவிர்த்து, மகிழ்ச்சியாக பண்டிகைகளை கொண்டாடுவோம். இயற்கையைப் பாதுகாப்போம். என்ற ஆர்வத்தில் தொடர்ந்து நாம் வடிவமைத்துள்ள நான்காவது பதாகை இது. நாம் ஏற்கனவே பதிவிட்ட மூன்று பதாகைகளுக்கும் வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கும், சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டு பலரைச் சென்றடைய வழிவகுத்த நண்பர்களுக்கும் நமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அனைவருக்கும் மற்றுமொரு முறை தீபாவளி வாழ்த்துக்கள். தொடர்புடைய பதிவுகள்- ஒரு மரணத்தைக் கொண்டாட, தேவையா இத்தனை…

பட்டாசு – குறும்படம்

தொடர்ந்த நமது தேடலில் பட்டாசு என்ற இந்த குறும்படம் சிக்கியது. இலங்கையில் எடுக்கப்பட்ட தமிழ்ப்படம் இது. இதன் இயக்குநர் த.ஷமிதன் அவர்கள் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களை மானசீகக்குருவாக ஏற்றுக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பத்து நிமிட இக்குறும்படம் பட்டாசு பற்றிய தனது கருத்தை வலுவாகக் கூறியிருக்கிறது. படத்தை பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன். இயக்குநருக்கு நமது வலைப்பதிவின் சார்பாக பாராட்டுக்களும், நன்றிகளும் உரித்தாகுக. தொடர்புடைய நமது பிற பதிவுகள். ஒரு மரணத்தைக் கொண்டாட, தேவையா இத்தனை மரணங்கள்? தீபங்களின்…

பண்டிகை எதுவாயினும் வேண்டாமே பட்டாசு!

சென்ற பதிவில் கூறியபடி, பட்டாசுகளைத் தவிர்த்து, மகிழ்ச்சியாக பண்டிகைகளை கொண்டாடுவோம். இயற்கையைப் பாதுகாப்போம். என்ற ஆர்வத்தில் நாம் வடிவமைத்துள்ள மூன்றாவது பதாகை இது. மேலும் சிலவற்றை வடிவமைக்கும் ஆர்வமுள்ளது. வடிவமைத்தால் பகிர்ந்து கொள்கிறோம். இக்கருத்துகள் உங்களுக்கும் உடன்பாடு எனில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தங்கள் கருத்துக்களையும், இது போன்ற பதாகைகளுக்கான கருத்துருக்கள் ஏதேனும் இருப்பின் அவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்புடைய பதிவுகள் ஒரு மரணத்தைக் கொண்டாட தேவையா இத்தனை மரணங்கள். தீபங்களின் அணிவரிசையாய் மலரட்டும் …. கூகுள் தேடலின்…