Classroom Fonts – வகுப்பறைப்பயன்பாட்டுக்கான எழுத்துருக்கள்

மாணவர்களுக்கு கையெழுத்துப் பயிற்சி அளிப்பதை எளிமைப்படுத்துவதற்காக ஆங்கிலத்தில் சிறப்பு எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை எழுத்துருக்களைத் தட்டச்சு செய்யும் போதே அதனுடன் இணைந்து எழுத்திடைக்கோடுகளும் தோன்றுகின்றன.  இதனால் ஆசிரியர் தனது மாணவர்களுக்கு பிரத்யேக கையெழுத்துப் பயிற்சித்தாள்களை உருவாக்க முடியும். ஒரு முறை தட்டச்சு செய்து, பிரிண்ட் எடுத்து அனைத்து மாணவர்களுக்கும் விநியோகிக்க முடியும். இதனால் ஆசிரியரின் நேரம் மிச்சப்படுவதோடு, மாணவர்களின் கையெழுத்தும் மேம்படும். கையெழுத்துப் பயிற்சிக்கான இத்தகைய எழுத்துருக்களைத் தவிர கணிதப்பயன்பாடு, சைகைமொழி, a-apple, b-ball போன்ற…

தூசியில்லா துடைப்பான்

Dust free Duster. அரசுப் பள்ளி மாணவர்களின் முயற்சி. பள்ளி மாணவர்கள் இணைந்து எளிமையான தூசி பறக்காத  கரும்பலகை துடைப்பானை   உருவாக்கியுள்ளனர். வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சிலர் தங்கள் அறிவியல் ஆசிரியர் திரு. இராமமூர்த்தியுடன் இணைந்து இதனை உருவாக்கியுள்ளனர். இதனை உருவாக்கும் எளிய செயல்முறை இதோ! பழைய சணல் சாக்கு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து சிறிய செவ்வக வடிவமாக ஒரு துண்டு நறுக்கிக் கொள்ளுங்கள். அதனை சோப்புப் பெட்டி அல்லது வேறு…

சூப்பர் மார்க்சீட்டும், உங்கள் பள்ளியின் பொதுத்தேர்வு முடிவுகளும்!

Originally posted on chalkpiece:
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரன்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்து விட்டன. பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் சரி! தங்களது (தங்கள் பிள்ளைகளது) மதிப்பெண்களை அலசி ஆராய்வதில் உள்ள சுகமே அலாதியானது தான். அந்த சுகத்தை அதிகப்படுத்தத்தான் ரிப்போர்ட் பீ எனும் இந்த இணையதளம். பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரன்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எண்ணை இத்தளத்தில் தந்து விட்டால் போதும், உங்கள் மதிப்பெண்ணை அலசி ஆராய்ந்து ஒரு மார்க்சீட்டை உங்களுக்குத் தருகிறது. அதில் பாடவாரியாக…

பள்ளி ஆசிரியர்களுக்குப் பயனுள்ள எஸ்.எம்.எஸ் சேவைகள்

Useful SMS Services for Teachers இன்றைய சூழலில், எல்லாத் துறைப் பணியாளர்களும் தங்கள் துறைசார்ந்த அவ்வப்போதைய தகவல்களை, அவ்வப்போதே தெரிந்து கொண்டு தங்களை அப்டேட் செய்து கொள்வது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. தமிழக பள்ளிக்கல்வியைப் பொறுத்தவரை அவ்வப்போது புதிய அரசாணைகளும், தினந்தோறும் ஆசிரியர்களது பணிசார்ந்த இயக்குநர்களின் செயல்முறைகளும், தொடர்ந்து மாற்றங்களை சந்தித்து வரும் கற்பித்தல் முறைகள் மற்றும் அது சார்ந்த செய்திகளும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இச்சூழலில் இத்தகைய தகவல்களை ஆசிரியர்களும், கல்வித்துறைப் பணியாளர்களும், அவ்வப்போது…

கணினித் தமிழ் வளர்ச்சியின் முன்னோடி ஆண்டோ பீட்டர் மரணம். நமது அதிர்ச்சியும் அஞ்சலியும்!

கணினித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், சி.எஸ்.சி, சாப்டுவியூ நிறுவனத்தின் நிறுவனரும்,கணினித் தமிழ்ச்சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும், பலநூல்களின் ஆசிரியருமான மா.ஆண்டோபீட்டர்  12.07.2012 அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் இயற்கை எய்தினார். அவர் தந்தை பெரியார் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். உத்தமம் என்ற அமைப்பில் இணைந்து பணிபுரிந்தவர். மா.ஆண்டோபீட்டர் வாழ்க்கைக்குறிப்பு தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் 26.04.1967 இல் பிறந்தவர். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். கணினி,இணையம்,அச்சத்துறை சார்ந்த பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். மென்பொருள் தயாரிப்பு, இணையப்பக்கம் வடிவமைப்பில்…

“ மனப்பாடம் செய்வோம் வாருங்கள்” என அழைக்கும் இணையதளம்.

இத்தளம் ஒரு வித்தியாசமான வசதியை வழங்குகிறது. நாம் மனப்பாடம் செய்ய வேண்டியவற்றை (ஆங்கிலத்தில்) எளிதில் மனப்பாடம் செய்ய இத்தளம் உதவுகிறது. நாம் சிறு வயதில் ஆங்கிலக் கட்டுரையை மனனம் செய்கையில் நண்பன் ஒருவனிடம் புத்தகத்தை தந்து, “நான் ஒப்புவிக்கிறேன். பார்” என்போமே அது போலத்தான் இதுவும். இத்தளத்தில் நாம் மனப்பாடம் செய்ய வேண்டியவற்றை டைப் (அல்லது காப்பி அல்லது பேஸ்ட்) செய்து கொண்டு, நாம் மனப்பாடம் செய்ய ஆரம்பிக்கலாம். மனனம் செய்ய வேண்டிய பத்தியை ஒரு முறை…

Originally posted on Cybersimman\'s Blog:
ரீட் எனி புக்,லிட்பை உள்ளிட்ட இணையத்திலேயே புத்தகங்களை வாசிக்க உதவும் இணையதளங்கள் மற்றும் அவற்றின் சிறப்புகள் பற்றி உற்சாகம் பொங்க எழுதி வருகிறேன்.இந்த பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் பலரும் கேட்கும் கேள்வி தமிழில் இதே போல இ புக் வடிவில் புத்தகங்களை வாசிக்க உதவும் தளங்கள் எவை என்பது தான்? ஆர்வத்தோடு கேட்கப்படும் இந்த கேள்விக்கு உற்சாகமாக சுட்டிக்காட்டக்கூடிய வகையில் ஒரு இணையதளம் அறிமுகமாகியுள்ளது.இந்த தளத்தை சுட்டிக்காட்டிய…