Classroom Fonts – வகுப்பறைப்பயன்பாட்டுக்கான எழுத்துருக்கள்

மாணவர்களுக்கு கையெழுத்துப் பயிற்சி அளிப்பதை எளிமைப்படுத்துவதற்காக ஆங்கிலத்தில் சிறப்பு எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை எழுத்துருக்களைத் தட்டச்சு செய்யும் போதே அதனுடன் இணைந்து எழுத்திடைக்கோடுகளும் தோன்றுகின்றன.  இதனால் ஆசிரியர் தனது மாணவர்களுக்கு பிரத்யேக கையெழுத்துப் பயிற்சித்தாள்களை உருவாக்க முடியும். ஒரு முறை தட்டச்சு செய்து, பிரிண்ட் எடுத்து அனைத்து மாணவர்களுக்கும் விநியோகிக்க முடியும். இதனால் ஆசிரியரின் நேரம் மிச்சப்படுவதோடு, மாணவர்களின் கையெழுத்தும் மேம்படும். கையெழுத்துப் பயிற்சிக்கான இத்தகைய எழுத்துருக்களைத் தவிர கணிதப்பயன்பாடு, சைகைமொழி, a-apple, b-ball போன்ற…

CCE Grade எளிதாகக் கணக்கிட ஒரு ஆன்ட்ராய்டு செயலி

CCE Grade Calculator for Teachers of Tamilnadu முப்பருவ முறையில் பின்பற்றப்படும் ஒருங்கிணைந்த மற்றும் தொடர் மதிப்பீட்டில் மாணவர்களின் வளரறி மற்றும் தொகுத்தறி மதிப்பெண்களிலிருந்து மாணவர்களது தரநிலையை அளவிட உதவும் வண்ணம் இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது, ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுடைய இந்த Android app -ஐ கீழே உள்ள இணைப்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். Google Play Store ல் பெற சொடுக்கவும்      

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு – மாணவர்களுக்காக

Life History of Abdul kalam – For Students மக்களின் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு மாணவர்களுக்கான பிரசன்டேசனாக பி.டி.எஃப் வடிவில் இணைக்கப்பட்டுள்ளது. வகுப்பறை நிகழ்வுகளுக்காக பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

தூசியில்லா துடைப்பான்

Dust free Duster. அரசுப் பள்ளி மாணவர்களின் முயற்சி. பள்ளி மாணவர்கள் இணைந்து எளிமையான தூசி பறக்காத  கரும்பலகை துடைப்பானை   உருவாக்கியுள்ளனர். வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சிலர் தங்கள் அறிவியல் ஆசிரியர் திரு. இராமமூர்த்தியுடன் இணைந்து இதனை உருவாக்கியுள்ளனர். இதனை உருவாக்கும் எளிய செயல்முறை இதோ! பழைய சணல் சாக்கு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து சிறிய செவ்வக வடிவமாக ஒரு துண்டு நறுக்கிக் கொள்ளுங்கள். அதனை சோப்புப் பெட்டி அல்லது வேறு…

வானவில் ஔவையார் எழுத்துருவை தட்டச்சலாம் NHMல்…

தட்டச்சு தெரியாவிட்டாலும் தட்டச்சு செய்யலாம்! இனி வானவில் எழுத்துருவை! நமது நண்பர் ஒருவரிடம் வானவில் ஔவையார் எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட்ட அலுவலக ரீதியிலான கோப்பு இருந்தது. அதில் சிறிய அளவில் மாற்றம் செய்ய வேண்டியிருந்த்து. ஆனால் அவரது கணினியில் வானவில் மென்பொருள் நிறுவப்பட்டிருக்கவில்லை. எழுத்துரு மட்டும் கோப்புடன் இணைத்து அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் கைகொடுத்த்து NHM ரைட்டர்.  எவ்வாறு என்று இங்கே நாம் பார்க்கலாம். தமிழக அரசு அலுவலகங்களிலும், கல்வித்துறையிலும் அலுவலக ரீதியிலான தகவல் தொடர்புகள் மற்றும் டாக்குமென்ட்களில்…

அன்பைப் பகிர்ந்திட ஒரு கணித வழி

அன்பைப் பகிர்ந்திட பலவழிகள் இருப்பினும், இது கணிதம் சார்ந்த வழி. உங்கள் பொதுவான நண்பர்களுக்கோ, கணிதம் சார்ந்த நண்பர்களுக்கோ கூட அனுப்பலாம். https://www.desmos.com/mathogram  என்ற இணைப்பில் இதற்கான வழி உள்ளது. இங்கு படத்திலுள்ளவாறு வரைபடத்தாளில் பல இதய வடிவங்கள் கணித சமன்பாடுகளின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. நீங்கள் சமன்பாட்டின் a இன் மதிப்பினை அருகில் உள்ள சிலைடரின் மூலம் நகர்த்த ஆரம்பித்தால் வரைபடத்தாளில் இதயங்கள் நடனமாடுவது போன்ற கண்கவர் காட்சியை கண்டுகளிக்கலாம். இங்கு சொடுக்கவும். நீங்கள் சமன்பாடுகளில் மாற்றம்…

அனைவர்க்கும் அறிவியல் – பிபிசியின் தமிழ் ஒலிக்கோர்வைகளை பதிவிறக்க

பிபிசி தமிழோசை பிபிசியின் உலகசேவையிலிருந்து வழங்கப்படும் தமிழோசை வானொலி நிகழ்ச்சிக்கு அறிமுகம் தேவையில்லை. செய்திகளின் தரத்தாலும், தமிழ் உச்சரிப்பிற்காகவும் அந்த செய்தியறிக்கைக்கான நேயர்கள் ஏராளம். நேரடியாக வானொலி நிகழ்ச்சியை கேட்க முடியாவிட்டாலும் பிபிசியின் தமிழ் இணைய தளத்தில் எப்போது வேண்டுமானாலும் நிகழ்ச்சியை கேட்டு மகிழ முடிகிறது. அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சி தமிழோசை நிகழ்ச்சியில் வாரம் ஒரு முறை அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அநேகமாக தமிழில் அறிவியல் செய்திகளை முந்தித் தருவது அந்நிகழ்ச்சியாகவே இருக்கும். பிபிசி…