அறிவியல்புரமும், நெஞ்சின் அலைகளும்.

தமிழில் அறிவியல் செய்திகளையும், கட்டுரைகளையும் வழங்கி வரும் முன்னணி வலைப்பதிவுகள் இரண்டினை நாம் இங்கு பார்க்கலாம். அறிவியல்புரம் சிறந்த அறிவியல் எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற திரு என்.ராமதுரை அவர்களால் இவ்வலைப்பதிவு பராமரிக்கப்படுகிறது. தமிழில் அறிவியல் செய்திகளை அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் இவ்வலைப்பதிவு விளக்குகிறது. செய்திகளின் பின்னணியில் உள்ள அறிவியல் கருத்துகளை மிக எளிதாகவும், நேர்த்தியாகவும் விளக்கும் விதத்தில் இவ்வலைப்பதிவு முன்னணியில் உள்ளது. முகவரி – http://www.ariviyal.in ஆசிரியர் பற்றி தினமணி நாளிதழின் செய்தி…

அன்பைப் பகிர்ந்திட ஒரு கணித வழி

அன்பைப் பகிர்ந்திட பலவழிகள் இருப்பினும், இது கணிதம் சார்ந்த வழி. உங்கள் பொதுவான நண்பர்களுக்கோ, கணிதம் சார்ந்த நண்பர்களுக்கோ கூட அனுப்பலாம். https://www.desmos.com/mathogram  என்ற இணைப்பில் இதற்கான வழி உள்ளது. இங்கு படத்திலுள்ளவாறு வரைபடத்தாளில் பல இதய வடிவங்கள் கணித சமன்பாடுகளின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. நீங்கள் சமன்பாட்டின் a இன் மதிப்பினை அருகில் உள்ள சிலைடரின் மூலம் நகர்த்த ஆரம்பித்தால் வரைபடத்தாளில் இதயங்கள் நடனமாடுவது போன்ற கண்கவர் காட்சியை கண்டுகளிக்கலாம். இங்கு சொடுக்கவும். நீங்கள் சமன்பாடுகளில் மாற்றம்…

கனமழைக்கு வாய்ப்பா? அறிய உதவும் இணையதளம்

இப்பதிவில் நாம் மழை நிலவரம் அறிய உதவும் செயற்கைக்கோள் புகைப்படத்தை எங்கு பார்ப்பது? மாவட்ட வாரியான மழை நிலவரம் எவ்வாறு அறிவது என அறிய இருக்கிறோம். கூகுள் என்ன சொல்கிறது? இப்பொழுதெல்லாம் கூகுள் தளத்திலேயே “weather” என டைப் செய்தால் உங்களது ஊரின் தற்போதைய தட்பவெப்பநிலை மற்றும் தொடரும் நான்கு நாட்களுக்கான தட்பவெப்பநிலை கணிப்புகள் தோன்றுகின்றன. இருப்பினும் நமக்கு செயற்கைக்கோள் புகைப்படமும், மாவட்ட வாரியான கணிப்புகளும் இருந்தால் பயனுடையதாக இருக்கும் அல்லவா? கீழ்காணும் அரசு இணையதளங்களில் இத்தகவல்களை…