வானவில் ஔவையார் எழுத்துருவை தட்டச்சலாம் NHMல்…

தட்டச்சு தெரியாவிட்டாலும் தட்டச்சு செய்யலாம்! இனி வானவில் எழுத்துருவை!

நமது நண்பர் ஒருவரிடம் வானவில் ஔவையார் எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட்ட அலுவலக ரீதியிலான கோப்பு இருந்தது. அதில் சிறிய அளவில் மாற்றம் செய்ய வேண்டியிருந்த்து. ஆனால் அவரது கணினியில் வானவில் மென்பொருள் நிறுவப்பட்டிருக்கவில்லை. எழுத்துரு மட்டும் கோப்புடன் இணைத்து அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் கைகொடுத்த்து NHM ரைட்டர்.  எவ்வாறு என்று இங்கே நாம் பார்க்கலாம்.

தமிழக அரசு அலுவலகங்களிலும், கல்வித்துறையிலும் அலுவலக ரீதியிலான தகவல் தொடர்புகள் மற்றும் டாக்குமென்ட்களில் வானவில்-ஔவையார் எழுத்துரு பயன்படுத்தப்படுகிறது.

இது ஒரு தனியார் நிறுவனத்தின் எழுத்துரு ஆகும். இதனை தட்டச்சு செய்ய அவர்களது நிறுவனத்தின் மென்பொருளையே பயன்படுத்த வேண்டியிருக்கிறது. பொதுவாக இந்த மென்பொருளை வாங்குவதற்கு என்று அரசு அலுவலகங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதும் இல்லை. இதனால் அரசு அலுவலகங்கள் கிராக் செய்யப்பட்ட மென்பொருளையே சார்ந்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. கிராக் செய்யப்பட்ட மென்பொருளும் வின்டோஸ் 7 இயக்கச்சூழலில் வேலை செய்வது இல்லை.

வேறு இலவச மாற்று வழி இருப்பின் அரசு அலுவலகங்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும். என்.எச்.எம் ரைட்டர் இதற்கு மிகப் பெரிய தீர்வாக அமைந்துள்ளது. (ஆமாம்! யுனிகோடுக்கு மாற வேண்டியது தானே!)

என்.எச்.எம் ரைட்டரை வானவில் ஔவையார் எழுத்துருவை தட்டச்சு செய்ய பயன்படுத்துதல்.

என்.எச்.எம் ரைட்டரை http://software.nhm.in/products/writer என்ற இணைய இணைப்பிலிருந்து பதிவிறக்கிக் கொண்டு உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்.

என்.எச்.எம் ரைட்டரை துவக்கிக் கொள்ளுங்கள். உங்கள் கணினியின் சிஸ்டம் nhm_2ட்ரேயில் என்.எச்.எம் ரைட்டருக்கான குறியீட்டில் (மணி போன்ற அடையாளம்)nhm_1 ரைட்கிளிக் செய்யுங்கள். வரக்கூடிய மெனுவில் செட்டிங்ஸ் என்பதை செலக்ட் செய்யவும்.

தற்போது திரையில் தோன்றும் செட்டிங்ஸ் வின்டோவில் பல்வேறு வகையான தமிழ் எழுத்துரு வடிவங்களுக்கான, தமிழ் விசைப்பலகை முறைகள் தரப்பட்டுள்ளன. வானவில் எழுத்துருவிற்கான என்கோடிங்கிற்கும், விசைப்பலகை முறைகள் தரப்பட்டுள்ளதை கவனியுங்கள். இங்கு தமிழ்99, இன்ஸ்கிரிப்ட், பாமினி முறை, பழைய தட்டச்சு முறை, ஃபொனடிக் முறை ஆகிய விசைப்பலகைகள் தரப்பட்டுள்ளன. அதில் உங்களுக்கு பழக்கமான விசைப்பலகை முறையை தேர்வு செய்து கொள்ளுங்கள்.nhm_3 உதாரணத்திற்காக நாம் தமிழ்99 விசைப்பலகை முறையை தேர்வு செய்துள்ளோம். அதற்கான சுருக்கு விசையையும் நிர்ணயித்துக் கொண்டால் பயனுடையதாக இருக்கும்.

இப்போது மீண்டும் சிஸ்டம் டிரேயில் உள்ள என்.எச்.எம் குறியீட்டில் இடதுகிளிக் செய்தால் நீங்கள் தேர்வு செய்த விசைப்பலகை முறையும் இடம் பெற்றிருப்பதை nhm_4கவனிக்கலாம். அதனை செலக்ட் செய்து கொள்ளுங்கள. (நீங்கள் நிர்ணயித்துள்ள சுருக்கு விசையை அழுத்தியும் நீங்கள் நேரடியாக விசைப்பலகை முறையை தேர்வு செய்து கொள்ளலாம்.)

அவ்வளவு தான் நீங்கள் வானவில் எழுத்துருக்களை தட்டச்சு செய்ய தயாராகி விட்டீர்கள்.

அது சரி! எழுத்துருவிற்கு என்ன செய்வது என்று கேட்கறீர்களா? எழுத்துரு பொதுவாக அலுவலக ரீதியான டாக்குமென்ட்களை பகிர்ந்து கொள்ளும் போது இணைத்தே வழங்கப்படுகிறது. எளிதாக கிடைக்கிறது.

நாம் பரிசோதித்த வரையில் பழைய தட்டச்சுமுறையை விட, தமிழ்99 முறை சிறப்பாக செயல்படுகிறது. தட்டச்சு தெரியாதவர்கள் கூட ஃபொனடிக் முறையின் மூலம் தட்டச்சு செய்து கொள்ளலாம் என்பது இதன் தனிச்சிறப்பு.

ஆம் நண்பர்களே! இனிமேல் Windows 2003/XP/7 & Vista ஆகிய எந்த இயக்கமுறையிலும் நாம் எளிதாக, இலவசமாக வானவில் எழுத்துருக்களை தட்டச்சு செய்யலாம்.

Advertisements

6 thoughts on “வானவில் ஔவையார் எழுத்துருவை தட்டச்சலாம் NHMல்…

  1. நன்றி தமிழ் எழுத்துரு தகவல் பயனுள்ளதாக இருந்தது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s