அறிவியல்புரமும், நெஞ்சின் அலைகளும்.

தமிழில் அறிவியல் செய்திகளையும், கட்டுரைகளையும் வழங்கி வரும் முன்னணி வலைப்பதிவுகள் இரண்டினை நாம் இங்கு பார்க்கலாம்.

அறிவியல்புரம்

சிறந்த அறிவியல் எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற திரு என்.ராமதுரை அவர்களால் இவ்வலைப்பதிவு பராமரிக்கப்படுகிறது.

தமிழில் அறிவியல் செய்திகளை அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் இவ்வலைப்பதிவு விளக்குகிறது.

செய்திகளின் பின்னணியில் உள்ள அறிவியல் கருத்துகளை மிக எளிதாகவும், நேர்த்தியாகவும் விளக்கும் விதத்தில் இவ்வலைப்பதிவு முன்னணியில் உள்ளது.

முகவரி – http://www.ariviyal.in

ஆசிரியர் பற்றி

தினமணி நாளிதழின் செய்தி ஆசிரியராகவும், தினமணியின் அறிவியல் வார இணைப்பாக வெளிவந்த “தினமணி சுடரின்” பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார். தினமணியில் பல அறிவியல் மற்றும் பொதுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

சிறந்த அறிவியல் எழுத்தாளருக்கான தேசிய விருதைப் பெற்ற ராமதுரை, தமிழக அரசு மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் விருதுகளையும் பெற்றுள்ளார்.

சமீபத்திய பதிவுகள் சில.

அண்டார்டிகாவில் பாதாள் ஏரியில் நுண்ணுயிர்கள்

வியாழன் கிரகத்தைப் பார்க்க ஆசையா?

புதன் கிரகத்தில் ஐஸ் கட்டிகள்

செவ்வாய்க்கு இந்திய விண்கலம்: சீனாவை மிஞ்ச ஆசை

பூமியை மிரட்டும் விண்கற்களைக் கண்டுபிடிப்பதில் இந்தியாவின் பங்கு

எளிதில் புரியும்படியாக, அறிவியல் கருத்துக்களை தமிழில் வெளிப்படுத்துவதைத் தனது முக்கிய பணியாக நினைக்கும் ராமதுரை தொடர்ந்து எழுதி வருகிறார்.

அவரது வலைப்பதிவு தமிழில் கவுரவிக்கப்பட வேண்டிய வலைப்பதிவுகளில் ஒன்று.

நெஞ்சின் அலைகள்

ஓய்வு பெற்ற பின் எழுத்தையே முழு நேரக் கடமையாக்க் கருதி செயல்பட்டுவரும் அணுவிஞ்ஞானி சி. ஜெயபாரதன் அவர்களால் இவ்வலைப்பதிவு பராமரிக்கப்பட்டு வருகிறது.

தமிழில் இவ்வளவு விளக்கமான அறிவியல் கட்டுரைகள் வருகின்றனவா என இக்கட்டுரைகளை வாசிக்கும் எவரும் ஆச்சரியப்படும் விதத்தில் உள்ளன இவரது கட்டுரைகள்.

தமிழ் மீதான தீராத ஆர்வத்துடன் கவிதையில் ஆரம்பித்து இவர் எழுதும் அறிவியல் கட்டுரைகள் வேறெவரிடத்திலும் காண முடியாதவை.

கட்டுரைகளுக்கான தெளிவான விளக்கபடங்கள் மட்டுமல்லாது, நீண்ட பார்வைப்பட்டியலுடன் வெளிவருகின்ற இக்கட்டுரைகள் மூலமாக மிகச் சிறந்த ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.

முகவரி – http://jayabarathan.wordpress.com

ஆசிரியர் பற்றிjayabarathans-photo.jpg

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றபின் 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் பெரிய பதவிகளில் பணியாற்றி பின் கனடாவில் இயங்கும் கான்டு புரூஸ் அணுமின் நிலையத்திலும் சிலகாலம் பணியாற்றியிருக்கிறார்

சமீபத்திய சில பதிவுகள்

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பூர்வீக யுகத்தில் நிலவை முடுக்கி ஓட்டியது உள்ளிருந்த மின்காந்த உந்துசக்தியே

நாற்பது மில்லியன் ஆண்டுகட்கு முன்பு இந்தியா ஆசியாவுடன் மோதி இணைந்தது

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பதினேழு பில்லியன் பரிதிகள் பளுவில் உள்ள பூதப்பெரும் கருந்துளை கண்டுபிடிப்பு

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சுருள் நிபுலாவிலிருந்து (Helix Nebula) வெளியேறும் சூரிய மண்டல வடிவுள்ள அண்டத் துண்டுகள்

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : ஈர்ப்பு விசை என்பது ஒருவித மாயையாய் இருக்கலாம் !

இவ்வலைப்பதிவின் பள்ளி மற்றும் கல்லூரிப் பயன்பாடுகள் பல. அவசியம் ஆசிரியர்கள் அறிய வேண்டிய வலைப்பதிவு இது.

பிரபஞ்சத்தின் மகத்தான புதிர்களை அறிந்து கொள்ளவும், ஆனந்தமாய் அறிவியல்புரத்தில் உலா வரவும் அழைக்கும் இவ்வலைப்பதிவுகளைப் பயன்படுத்திப் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களிடமும் பகிர்ந்திடுவோம்.

Advertisements

4 thoughts on “அறிவியல்புரமும், நெஞ்சின் அலைகளும்.

 1. தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு எழுதுவதாக இருந்த இந்த பதிவு, கணினி பழுது காரணமாக தாமதமாக வெளியிடப்படுகிறது.

 2. நெஞ்சின் அலைகள் சிறந்த விஞ்ஞான வலைத்தளம். திரு.சி.ஜெயபாரதன் அவர்களின் சேவை மகத்தானது.திண்ணையில், வல்லமையில் அவரது படைப்புகளை காணலாம், நேரத்தைப் விஞ்ஞானமாக மாற்றத் தெரிந்த சித்தர் .
  அன்புடன்
  ஜெயஸ்ரீ ஷங்கர்

  • தொடர்ந்து அவரது பதிவுகளை படித்து வருபவர்களில் நானும் ஒருவன் என்பதை பகிர்ந்து கொள்வதே மகிழ்ச்சியான விஷயமாக இருக்கிறது. தங்களது வருகைக்கு நன்றிகளும், மகிழ்ச்சியும்….

 3. என் படைப்புகளைப் படித்துப் பாராட்டும் நண்பர் திரு. ராமதுரைக்கு எனது பரிவான, பணிவான நன்றிகள். உங்கள் அரிய விஞ்ஞானப் படைப்புகளும் தமிழில் அடிக்கடி வெளிவருவதைப் படித்திருக்கிறேன். பெரு மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் நட்பு கிடைத்ததற்கு.

  நட்புடன்,
  சி. ஜெயபாரதன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s