ஆரம்பம் நாங்களாக இருக்கலாம். முடிவு ….?

உலக சிட்டுக்குருவிகள் நாள் மார்ச் 20 ஐ ஒட்டி பறவை ஆர்வலர் திரு கல்பட்டு நடராஜன் ஐயா அவர்களின் தையல்காரப் பறவைகள் குறித்த வீடியோ பதிவையும் இங்கு நாம் காணுவது பொருத்தமாக இருக்கும். அறிவியல் தமிழ்மன்றம் தனது youtube channel மூலம் பல பயனுள்ள தமிழ் அறிவியல் வீடியோக்களை வழங்கி வருகிறது. பார்த்துவிட்டு கருத்துக்களை பதிவு செய்யுங்கள். Picture Courtesy : http://commons.wikimedia.org பிற பதிவர்களின் பதிவுகள் இன்று உலக சிட்டுக் குருவிகள் தினம் துளசி டீச்சரின் சிட்டுக்குருவி அனுபவங்கள்…

வானவில் ஔவையார் எழுத்துருவை தட்டச்சலாம் NHMல்…

தட்டச்சு தெரியாவிட்டாலும் தட்டச்சு செய்யலாம்! இனி வானவில் எழுத்துருவை! நமது நண்பர் ஒருவரிடம் வானவில் ஔவையார் எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட்ட அலுவலக ரீதியிலான கோப்பு இருந்தது. அதில் சிறிய அளவில் மாற்றம் செய்ய வேண்டியிருந்த்து. ஆனால் அவரது கணினியில் வானவில் மென்பொருள் நிறுவப்பட்டிருக்கவில்லை. எழுத்துரு மட்டும் கோப்புடன் இணைத்து அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் கைகொடுத்த்து NHM ரைட்டர்.  எவ்வாறு என்று இங்கே நாம் பார்க்கலாம். தமிழக அரசு அலுவலகங்களிலும், கல்வித்துறையிலும் அலுவலக ரீதியிலான தகவல் தொடர்புகள் மற்றும் டாக்குமென்ட்களில்…

அறிவியல்புரமும், நெஞ்சின் அலைகளும்.

தமிழில் அறிவியல் செய்திகளையும், கட்டுரைகளையும் வழங்கி வரும் முன்னணி வலைப்பதிவுகள் இரண்டினை நாம் இங்கு பார்க்கலாம். அறிவியல்புரம் சிறந்த அறிவியல் எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற திரு என்.ராமதுரை அவர்களால் இவ்வலைப்பதிவு பராமரிக்கப்படுகிறது. தமிழில் அறிவியல் செய்திகளை அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் இவ்வலைப்பதிவு விளக்குகிறது. செய்திகளின் பின்னணியில் உள்ள அறிவியல் கருத்துகளை மிக எளிதாகவும், நேர்த்தியாகவும் விளக்கும் விதத்தில் இவ்வலைப்பதிவு முன்னணியில் உள்ளது. முகவரி – http://www.ariviyal.in ஆசிரியர் பற்றி தினமணி நாளிதழின் செய்தி…