அனைவர்க்கும் அறிவியல் – பிபிசியின் தமிழ் ஒலிக்கோர்வைகளை பதிவிறக்க

பிபிசி தமிழோசை

பிபிசியின் உலகசேவையிலிருந்து வழங்கப்படும் தமிழோசை வானொலி நிகழ்ச்சிக்கு அறிமுகம் தேவையில்லை. செய்திகளின் தரத்தாலும், தமிழ் உச்சரிப்பிற்காகவும் அந்த செய்தியறிக்கைக்கான நேயர்கள் ஏராளம்.

நேரடியாக வானொலி நிகழ்ச்சியை கேட்க முடியாவிட்டாலும் பிபிசியின் தமிழ் இணைய தளத்தில் எப்போது வேண்டுமானாலும் நிகழ்ச்சியை கேட்டு மகிழ முடிகிறது.

அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சிAnaivarkkum Ariviyal

தமிழோசை நிகழ்ச்சியில் வாரம் ஒரு முறை அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அநேகமாக தமிழில் அறிவியல் செய்திகளை முந்தித் தருவது அந்நிகழ்ச்சியாகவே இருக்கும். பிபிசி தமிழோசையில் அச்செய்தி வந்த பின்னரே பிற தமிழ் நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களில் வருவதை பல சமயம் காணமுடிகிறது.

இலவசமாக பதிவிறக்க

மற்றுமொரு புதிய வசதியாக பிபிசி,  அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சிக்கான ஒலிக்கோர்வைகளை (podcasts) இலவசமாக பதிவிறக்க வழிவகை செய்துள்ளது. பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைச் சொடுக்கவும். (http://www.bbc.co.uk/podcasts/series/ariviyal)

பள்ளிகளில் இதற்கான பயன்பாடுகள் பல. குறிப்பாக அறிவியல் ஆசிரியர்களுக்கு இந்த ஒலிக்கோர்வைகள் அதிகம் பயன்படக்கூடும். காலை வழிபாட்டுக் கூட்டங்களில் செய்தி வாசிப்பினிடையே இந்த ஒலிக்கோர்வைகளை பயன்படுத்திக் கொள்ள இயலும்.  ஆசிரிய, மாணவ சமூகம் பயன்படுத்திப் பயன்பெற வேண்டுகிறோம்.

Advertisements

2 thoughts on “அனைவர்க்கும் அறிவியல் – பிபிசியின் தமிழ் ஒலிக்கோர்வைகளை பதிவிறக்க

  1. எங்கே காணோம் ரொம்ப நாட்களாக என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
    ஒரு நல்ல தகவலுடன் மீண்டும் வந்தது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

    இந்த அறிய சேவையை தொடர்ந்து செய்ய வாழ்த்துகள்!

    • தொடர்ந்த சில பணிகளால் வலைப்பதிவின் பக்கம் வர இயலவில்லை. தங்களைப் போன்றோரின் ஊக்கமே தொடர்ந்து பதிவிட எனக்கு ஒரு தூண்டுகோல். தங்களது வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் மிகுந்த நன்றியுடையவனாகிறேன் நான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s