வேறெங்கே நான் செல்ல?…

Say No to Crackers

அனைவருக்கும் நமது வலைப்பதிவின் சார்பாக தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். பட்டாசுகளைத் தவிர்த்து, மகிழ்ச்சியாக பண்டிகைகளை கொண்டாடுவோம். இயற்கையைப் பாதுகாப்போம். என்ற ஆர்வத்தில் தொடர்ந்து நாம் வடிவமைத்துள்ள நான்காவது பதாகை இது.

நாம் ஏற்கனவே பதிவிட்ட மூன்று பதாகைகளுக்கும் வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கும், சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டு பலரைச் சென்றடைய வழிவகுத்த நண்பர்களுக்கும் நமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைவருக்கும் மற்றுமொரு முறை தீபாவளி வாழ்த்துக்கள்.

தொடர்புடைய பதிவுகள்-

ஒரு மரணத்தைக் கொண்டாட, தேவையா இத்தனை மரணங்கள்.

தீபங்களின் அணிவரிசையாய் மலரட்டும்.

பண்டிகை எதுவாயினும் வேண்டாமே பட்டாசு!

பட்டாசு – குறும்படம்.

 

Advertisements

8 thoughts on “வேறெங்கே நான் செல்ல?…

  1. அன்புடையீர்,
    நீங்கள் இந்தப் பதிவிலும் பிற பதிவுகளிலும் பட்டாசு வேண்டாம் என்று கூடிய இருக்கிறீர்கள். நீங்கள் சொல்லும் காரணங்கள் வலுவானவை.

    ஆனால் இந்தத் தொழிலை நம்பி – உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் – தாங்கள் உயிரைப் பணயம் வைத்து – இதில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நமது ‘பட்டாசு வேண்டாம்’ என்ற கோஷத்தினால் வாடாதா?

    இவர்களுக்கு முதலில் நல் வாழ்வு என்று கோஷமிடுவோம். பிறகு பட்டாசு வேண்டாம் என்போம்.

    அன்புடன்,
    ரஞ்ஜனி

    • தங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி! இயற்கை ஆர்வலன் என்ற முறையில் எனது கருத்துக்களை இங்கு பதிவு செய்திருக்கிறேன். பட்டாசு வேண்டாம் என்ற கோஷமும் கூட, கடும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வேதிப் பொருள்களுடன் தொடர்ந்து பணியாற்றக் கூடிய தொழிலாளர்களுக்கும் நிச்சயம் மறைமுகமாக நன்மை பயக்கும் என்பதே எனது பணிவான கருத்து. நீங்கள் சொல்வது போல அத்தொழிலாளர்களுக்கு பிற மாற்றுத் தொழில் வசதிகள் செய்து தர வேண்டியது ஒரு சமூகக் கடமையே!
      தொடர்ந்த தங்களது வருகைக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும். தங்களது சமீபத்திய இடுக்கை வேர்டுபிரஸ்ஸின் முன்னணி இடுக்கைகளில் முதலிடத்தை வகிப்பது கண்டேன். மிக்க மகிழச்சி. வாழ்த்துக்கள்

  2. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள், தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில் – நன்றி.

  3. தமிழர்களின் தீபத்திருநாள் கார்த்திகைதான். தீபாவளி அல்ல. மழையை வழியனுப்ப கார்த்திகை மாதம் தீபம் வைப்பதாக பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் கூறுகிறார்.

    பறவைகளுக்கு இடையூறாகயிறுக்குமென்று நானும் பட்டாசு வெடிப்பதில்லை.

    நாகனவாய்ப்புள்ளின்(மைனா) படம் அருமையாக உள்ளது.

    நல்ல பகிர்வ. நன்றி.

    • தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகளும், மகிழ்ச்சியும். தங்களது வலைப்பதிவின் ரசிகன் நான். தங்களது வருகையால் பெருமிதமடைந்தேன். தொடர்ந்து வருகை தாருங்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s