கனமழைக்கு வாய்ப்பா? அறிய உதவும் இணையதளம்

இப்பதிவில் நாம் மழை நிலவரம் அறிய உதவும் செயற்கைக்கோள் புகைப்படத்தை எங்கு பார்ப்பது? மாவட்ட வாரியான மழை நிலவரம் எவ்வாறு அறிவது என அறிய இருக்கிறோம்.

கூகுள் என்ன சொல்கிறது?

இப்பொழுதெல்லாம் கூகுள் தளத்திலேயே “weather” என டைப் செய்தால் உங்களது ஊரின் தற்போதைய தட்பவெப்பநிலை மற்றும் தொடரும் நான்கு நாட்களுக்கான தட்பவெப்பநிலை கணிப்புகள் தோன்றுகின்றன.

இருப்பினும் நமக்கு செயற்கைக்கோள் புகைப்படமும், மாவட்ட வாரியான கணிப்புகளும் இருந்தால் பயனுடையதாக இருக்கும் அல்லவா? கீழ்காணும் அரசு இணையதளங்களில் இத்தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

செயற்கைக் கோள் புகைப்படம் பார்க்க…

மத்திய அரசின் India Meteorological Department ன் தளத்தின் (http://www.imd.gov.in) இந்த இணைப்பில் (http://www.imd.gov.in/section/nhac/dynamic/nhacsatimg.htm) நாம் செயற்கைக்கோள் புகைப்படத்தைக் காண இயலுகிறது. இப்படம் ஒவ்வொரு நாளும் பலமுறை அப்டேட் செய்யப்படுகிறது. இத்தளத்தின் மற்றுமொரு இணைப்பில் பலவகையான செயற்கைக்கோள் புகைப்படங்கள் காணக் கிடைக்கின்றன.

மாவட்ட வாரியான மழை நிலவரம் அறிய….

“செயற்கைக் கோள் படம் இருக்கட்டும். எங்கள் மாவட்டத்தில் மழை எப்படியிருக்கும்?” என்று கேட்கிறீர்களா… இதோ அதற்கும் பதில் வைத்திருக்கிறது. இத்துறையின் சென்னை மண்டலத்திற்கான இணையதளம் (http://www.imdchennai.gov.in).  இத்தளத்தின் இந்த இணைப்பில் (http://www.imdchennai.gov.in/distfcst.htm) தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியான மழை நிலவரம் மற்றும் கணிப்புகள் தரப்பட்டுள்ளது.

இங்கே D=DRY; R= RAIN; R+ = HEAVY RAIN; R++ = VERY HEAVY RAIN  என்றவாறு குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

உங்கள் மாவட்டத்தில் நாளை மழை எப்படியிருக்கும்? கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்களேன்.

http://www.imd.gov.in தளத்தில் புவியியல் மற்றும் வானிலை பற்றி பயிலும் மாணவர்களுக்கும், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும்  பல பயனுள்ள தகவல்களும், அறிக்கைகளும் கிடைக்கின்றன. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 
Advertisements

6 thoughts on “கனமழைக்கு வாய்ப்பா? அறிய உதவும் இணையதளம்

  1. தமிழில் வானிலை வலைபதிப்பு ஒன்று நாங்கள் துவங்கி உள்ளோம், தயவு கூர்ந்து பார்த்து விட்டு தங்களது கருத்துகளை தெரிவியுங்கள். வானிலை நிகழ்வுகளை தமிழில் வரைபடம் மூலம் சற்று எளிமையாக கூறுவதற்கு முயற்சித்துள்ளோம். நன்றி. http://vaanilai.chennairains.com/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s