பயனுள்ள வலைத்தளங்களை அறிமுகப்படுத்தும் வலைப்பதிவு.

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்.

வலைப்பதிவு முகவரி – http://cybersimman.wordpress.com

இணைய தொழில்நுட்பத்தின் நடைமுறைப் பயன்பாடுகள் பலவற்றை நாம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தினசரி அனுபவித்து வருகிறோம். இருப்பினும் அதனுடைய எதிர்மறைப் பயன்பாடுகளைக் கண்டு பல சமயங்களில் அஞ்சவும் வேண்டியிருக்கிறது.

சமூக மாற்றத்திற்கான மிகப் பெரிய தொழில் நுட்பமாக இருக்கத்தக்க வல்லமை வாய்ந்த இந்த தொழில்நுட்பம், சமூகத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தன்மையுடையதாகவும் உள்ளது.

இணையத்தை எவ்விதம் நல்ல முறையில் பயன்படுத்துவது என்று நமது இளந்தலைமுறைக்கு கற்றுத்தருவது, இன்றைக்கு நம் முன் உள்ள மிகப்பெரிய சமூகக் கடமையாகும்.

இக் கடமையை சிறப்பாக ஆற்றி வரக் கூடிய சிம்மன் அவர்களை நாம் பாராட்டவும், அவரது இந்த வலைப்பதிவிற்கு உரிய அங்கீகாரம் தரவும் கடமைப்பட்டுள்ளோம்.

இவர் தினசரி ஒரு பயனுள்ள வலைத்தளத்தை அறிமுகப்படுத்துவதை தமது கடமை போல எண்ணிச் செயல்படுகிறார். அறிமுகப்படுத்துவது என்றால் வெறுமனே கடமைக்கு எழுதாமல், அவ்வலைத்தளத்தை முழுமையாகவும், பொறுமையாகவும் பயன்படுத்திப் பார்த்துவிட்டே அதனைப் பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

அவ்வலைத்தளம் எவ்வகையில் முக்கியமானது? அதன் தனித்தன்மை என்ன? அதனுடன் ஒப்பிடத்தக்க வலைத்தளங்கள் யாவை? அவற்றிலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது? அத்தளம் வழங்கும் சிறப்பு வசதிகள் என்னென்ன? அத்தளத்தின் குறைபாடுகள் என்ன?  மேலும் என்னென்ன வசதிகள் இருந்தால் சிறப்பாக இருக்கும்? பயன்படுத்துவோருக்கான குறிப்புகள் என்னென்ன? எனப் பலகோணங்களில் ஆராய்ந்தே எழுதுகிறார்.

தேவையான இடங்களில் தனது பிற பதிவுகளுக்கான இணைப்புகளையும் தந்திருப்பது மிகப் பயனுடையதாக இருக்கிறது.

சிம்மன் அவர்கள் தனது வலைப்பதிவை எந்த திரட்டியிலும் இணைப்பதில்லை. இருப்பினும் வேர்டுபிரஸ்ஸின் முன்னணி இடுக்கைகளில் சிம்மனுக்கென்று எப்பொழுதும் ஒரு நிரந்தர இடம் உண்டு.

இலக்கிய உலகில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் எழுத்துக்கள் உலக இலக்கியங்களை எவ்விதம் கடைக்கோடி வாசகனுக்கும் அறிமுகப்படுத்தும் பணியைச் செய்கிறதோ, அதே போல் இணைய உலகில் சிறந்த வலைத்தளங்களை அறிமுகப்படுத்தும் பணியை இவரது வலைப்பதிவு செய்கிறது.

சமீபத்திய பதிவுகள் பல சமூக வலைத்தளங்கள் பற்றிய ஜனரஞ்சக பதிவுகள் என்றாலும்,  ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

கல்விப்பயனுடைய இணையதளங்கள் குறித்த இவரது பதிவுகளில் சிலவற்றிற்கான இணைப்புகளை மட்டும் மாதிரிக்காக கீழே தந்துள்ளோம். மாணவ, ஆசிரிய சமூகம் பயன்படுத்திப் பயன்பெற வேண்டுகிறோம்.

பேசுங்கள்;புதிய மொழியை கற்று கொள்ளுங்கள்!

மாணவர்களுக்கான இணையதளம்

உங்களுக்கு தெரியுமா? கேட்டு அசத்து இணையதளம்.

வரையலாம்,பகிரலாம்;அழைக்கும் இணையதளம்.

20 ஆயிரம் புத்தகங்களோடு அழைக்கும் இணையதளம்.

கால் முளைத்த விக்கிபீடியா

சிறுவர்களுக்கான இமெயில் சேவை

குழந்தைகளுக்கு கதை சொல்லும் இணையதளம்

செய்திகளை தெரிந்து கொள்ள வண்ணமயமான வழி.
Advertisements

9 thoughts on “பயனுள்ள வலைத்தளங்களை அறிமுகப்படுத்தும் வலைப்பதிவு.

  • தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே! வலைத்திரட்டியை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள்.

 1. ஆம். அதனைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். தங்களது நினைவூட்டலுக்கு நன்றி.! நான் தொடர்ந்து பார்க்கும் வலைப்பதிவுகளுள் தங்களதும் ஒன்று. தங்கள் வருகை குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

 2. எல்லாத் தளங்களையும் அறிமுகம் செய்யும் தன்னலமற்ற தொண்டைச் செய்து வரும் திரு. சிம்மனுக்கு, சிறந்த முறையில் ஒரு அறிமுகம் எழுதி இருக்கிறீர்கள்.

  பாராட்டுக்கள்!

  • தங்களது வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி அம்மா! நீங்கள் சிம்மன் அவர்களது வலைப்பதிவில் பின்னூட்டத்தில் தெரிவித்தது போல, சிம்மன் அவர்களது வலைப்பதிவை அறிமுகப்படுத்தியதில் மிகுந்த பெருமையும் சந்தோஷமும் அடைகிறேன். அவரது தன்னலமற்ற சேவைக்கு மதிப்பளிக்க என்னால் இயன்ற சிறிய அர்ப்பணிப்பாக இதைக் கருதுகிறேன். தொடர்ந்து நமது வலைப்பதிவுக்கும் வருகை தாருங்கள். தங்களைப் போன்றோர்களின் ஆதரவும், ஆசியும் என்றும் தேவை.

 3. திரு. ஸிம்ஹன்தான் பதிவுகளில் வெகு துல்லியமாக மனோதத்துவம் அறிந்தவராக ஆச்சரியப்படும் வகையில் எழுதுகிறாரென்றால் அவரின்
  மதிப்பை குன்றின்மேல் இட்ட தீபமாக நீங்கள் எழுதியிருப்பது பார்த்து
  ஸந்தோஷமென்றால் ஒரு அப்படிப்பட்ட ஸந்தோஷம். உங்களையும் பாராட்டி , உங்களையும் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டதை நன்றியுடனும் அன்புடனும் சொல்லுகிறேன்.

 4. தங்கள் வருகை கண்டு மிக மகிழ்ந்தேன். சிம்மன் மற்றும் நீங்கள் எல்லாம் என்னைப் போன்றோர்க்கு முன்மாதிரிகள். உங்களது ஆதரவும் ஆசிகளும் எனக்கு என்றும் தேவை. (அவ்வப்போது வீட்டில் மிகச் சுவையான உணவுகள் உங்கள் சமையல் குறிப்புகளின் உபயம். அதற்காக எனது மற்றும் எனது மனைவியின் சிறப்பு நன்றிகள் உங்களுக்கு). தங்களது உளமார்ந்த வாழ்த்துகளுக்கும், கருத்துரைக்கும் எனது மகிழ்ச்சியும்.நன்றிகளும்….

 5. வணக்கம். தங்கள் தளம் சிறப்பான வலைப்பக்கங்களை அறிமுகப்படுத்துவது குறித்து மிக்க மகிழ்ச்சி. Cybercimman தளம் அனைவரும் அறிந்ததே. இருப்பினும் உங்கள் அறிமுகம் அவருக்கு இன்னொரு அங்கீகாரம்.

  ஸ்ரீ….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s