போட்டித் தேர்வு எழுதிப் பழக ஒரு இணையதளம்

Useful Webeite for Competitive Examinations

எந்த ஒரு போட்டித் தேர்வாக இருந்தாலும், பல மாதிரித் தேர்வுகள் எழுதிப் பழகி தேர்வுக்கு தயாராவது மிகுந்த பயனுடையதாக இருக்கிறது. மாதிரித் தேர்வுகள் நம்மை பட்டைதீட்டி ஒரஜினல் தேர்வில் சுடர்விட்டு ஒளிரச் செய்கின்றன.

அந்த வகையில் இந்த நீங்கள் தயாராகும் போட்டித் தேர்வு எதுவாக இருந்தாலும் இந்த இணையதளம் மிகப் பயனுடையதாக இருக்கும்.

நாம் செய்ய வேண்டியது இதுதான். நாம் எந்தத் தேர்வுக்கு தயாராகிறோமோ அந்தத் தேர்வை தேர்வு செய்து கொண்டால் பல ஆன்லைன் தேர்வுகளை இந்த இணையதளம் வழங்குகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் அத்தேர்வை நாம் முடிக்க வேண்டும். தேர்வை நாம் முடித்தவுடன் உடனே நமது மதிப்பெண்களை தெரிந்து கொள்ள முடிகிறது.

கீழே இத்தளம் வழங்கும் தேர்வுகளின் பட்டியலைப் பாருங்கள். அட! எதுதான் இல்லை என்று தோன்றுகிறதா?

School Programs

 • CBSE / ICSE
 • Class XI / XII
 • NTSE / Olympiad
 • Polytechnic Diploma
Management

 • MBA Entrance
 • BBA Entrance
 • Hotel Management
 • Marketing Management
Languages & Skills

 • General Knowledge
 • English
 • Aptitude
 • IQ
 • French
Study Abroad

 • GRE
 • SAT
 • ACT
 • GMAT
 • IELTS
 • TOEFL
Govt. & Private Jobs

 • Banking | Insurance
 • B.Ed/M .Ed | UGC | TET
 • Defence: CDS | NDA
 • Placement Papers
 • Railways
 • CSAT
Arts, Commerce & Law

 • Law Entrance
 • Fashion Designing
 • CA – CPT
 • Commerce
 • Gandhian Studies
Science & Tech.

 • Engineering Entrance
 • Medical Entrance
 • GATE
 • IES
 • MCA Entrance
 • BCA Entrance
 • IT & Computers
 • Aviation
 • Architecture
 • Pharma
 • B.Sc.
 • M.Sc

நீங்கள் பணம் செலுத்தி இத்தளத்தில் பதிவு செய்து கொண்டால் மேலும் பல வசதிகளைப் பெற முடிகிறது. நமது தேர்வு முடிவுகளை அக்குவேறாக ஆணிவேறாக அலசித் தருகிறது. இந்த இணையதளம். நமது ஸ்ட்ராங் ஏரியா, வீக் ஏரியா,எதில் விரைவாக பதிலளிக்கிறோம். எதில் மெதுவாக பதிலளிக்கிறோம் எனப் பல விஷயங்களை அலசித் தருகிறது.

ஒவ்வொரு தேர்வு மதிப்பெண்ணையும் தேசிய அளவில் டாப் 10 மதிப்பெண்களோடு ஒப்பிட்டுப் பார்க்க இயலுகிறது. தொடர்ந்து பல தேர்வுகளை நாம் எழுதும் போது நாம் அடைகிற முன்னேற்றத்தை மதிப்பிட்டுத் தருகிறது.

மிக ஜாலியான விஷயம் என்னவெனில் நமது ஸ்கோரை நமது நண்பர்களின் ஸ்கோரோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். நமது மதிப்பெண்களை அவர்களுக்குத் தெரிவிக்கலாம். ஆன்லைனில் சாட் செய்து சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். நமது நண்பர்களை குறிப்பிட்ட தேர்வை எடுக்கச் சொல்லி சேலஞ்ச்சுக்கு அழைக்கலாம்.

இதன் கணக்கிலடங்கா மாதிரித்தேர்வுகளும், தேர்வு முடிவுகள் குறித்த அலசலும் நம்மை வியக்க வைக்கின்றன. இதன் பயன்களை ஒப்பிடும் போது, நாம் பதிவு செய்ய செலுத்தும் பணம் மிகக் குறைவே என்று தோன்றுகிறது.

மற்றுமொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், உங்களால் இது போன்ற மாதிரித்தேர்வுகளை உருவாக்க இயலும் என்றால், நீங்கள் உங்களை இத்தளத்தில் பதிவு செய்து கொண்டு, தேர்வுகளை உருவாக்கித் தரலாம். நீங்கள் உருவாக்கும் தேர்வின் தரத்தின் அடிப்படையில் உங்களுக்கு வருமானம் கிடைக்கும்.

அவசியம் ஒருமுறை இத்தளத்தை சென்று பாருங்கள். வெற்றி உங்களுக்காக காத்துக்கிடக்கிறது.

வலைத்தள முகவரி- http://www.tcyonline.com

தொடர்புடைய பிற பதிவுகள்-

போட்டித் தேர்வு எழுதுவோர்க்கு அவசியமான இணையதளம்
நாலு பேருக்கு சோறு போடுங்க! உங்க கம்ப்யூட்டர்ல!!
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s