பள்ளி ஆசிரியர்களுக்குப் பயனுள்ள எஸ்.எம்.எஸ் சேவைகள்

Useful SMS Services for Teachers

இன்றைய சூழலில், எல்லாத் துறைப் பணியாளர்களும் தங்கள் துறைசார்ந்த அவ்வப்போதைய தகவல்களை, அவ்வப்போதே தெரிந்து கொண்டு தங்களை அப்டேட் செய்து கொள்வது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. தமிழக பள்ளிக்கல்வியைப் பொறுத்தவரை அவ்வப்போது புதிய அரசாணைகளும், தினந்தோறும் ஆசிரியர்களது பணிசார்ந்த இயக்குநர்களின் செயல்முறைகளும், தொடர்ந்து மாற்றங்களை சந்தித்து வரும் கற்பித்தல் முறைகள் மற்றும் அது சார்ந்த செய்திகளும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

இச்சூழலில் இத்தகைய தகவல்களை ஆசிரியர்களும், கல்வித்துறைப் பணியாளர்களும், அவ்வப்போது தெரிந்து கொண்டு, தங்களை அப்டேட் செய்து கொண்டு பணியாற்றுவது என்பது, மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஒருங்கே நலம் பயப்பதாக உள்ளது.

இதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள இயக்க இதழ்கள், இயக்க நாட்குறிப்பேடுகள் மற்றும் அதனுடன் வழங்கப்படும் விதிமுறைப் புத்தகம் ஆகியவை மிகுந்த பயனளிப்பவையாக இருக்கின்றன. ஆனாலும் இன்றைய நவீன சூழலில் பல தனி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அமைப்புகள் சார்ந்த வலைத்தளங்கள் மரபு சார்ந்த மற்ற வழிகளைக் காட்டிலும் மிகுந்த பயனளிப்பவையாகவும், உடனடியாக தகவல்களை வழங்குபவைகளாகவும் உள்ளன.

குறிப்பாக, இத்தகைய வலைத்தளங்கள் இலவசமாக வழங்கும் எஸ்.எம்.எஸ் சேவைகள் மிக அற்புதமாகவும், மிக பயனுடையதாகவும் உள்ளன. இவை நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை சென்று சேர்கின்றன. இவற்றை மேலும் பல ஆசிரியர்கள் பயன்படுத்திப் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில், நாம் முடிந்தவரை அத்தகைய சேவைகளை இங்கே தொகுத்துத் தர முயன்றுள்ளோம்.

இதுவும் கூகுளின் சேவையே!

இத்தகைய சேவைகள் பெரும்பாலும் கூகுள் எஸ்.எம்.எஸ் சேனல்கள் மூலமாக வழங்கப்படுகின்றன. இத்தகைய சேவைகளைப் பெறும் முன் நாம் ஏற்கனவே நமது செல்பேசியில் தேவையற்ற விளம்பரங்களை தவிர்ப்பதற்காக DND (Do Not Distrub) எனப்படும் சேவையை ஆக்டிவேட் செய்திருந்தால் அதனை டிஆக்டிவேட் செய்ய வேண்டும்.

மாற்று சேவைகள்:

ஒட்டு மொத்தமாக எஸ்.எம்.எஸ் அனுப்புவதற்கான கட்டணங்கள் தற்போது உயர்ததப்பட்டதன் காரணமாக கூகுள் எஸ். எம்.எஸ் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் பல தளங்கள் வேறு சில மாற்று சேவைகள் வழியாகவும் இச்சேவைகளை வழங்கி வருகின்றன. ஆசிரிய நண்பர்கள் அதனையும் ஆக்டிவேட் செய்து தடையற்ற சேவையைப் பெறுமாறு கோருகிறோம்.

DND பதிவை ரத்து செய்யும் வழிமுறை:

1909 (Toll Free) என்ற எண்ணை அழைத்து DND பதிவை ரத்து செய்யுங்கள் அல்லது STOP DND என்று டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள்.

பயனுள்ள எஸ்.எம்.எஸ் சேவைகள்:

கல்விச்சோலை

http://www.kalvisolai.com

கல்விசார்ந்த பயனுள்ள தகவல்களை வழங்கும் ஆசிரியர்களுக்கு உதவிகரமான சேவைகளில் முதலிடத்தில் இருக்கிறது இந்த வலைத்தளம்.  கீழ்கண்டவாறு உங்கள் செல்போனில் தட்டச்சு செய்து அருகில் தரப்பட்டுள்ள எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் செய்யுங்கள்.

ON kalvisolai                  9870807070

JOIN kalvisolai              567678

TEACHER TN

http://www.teachertn.com

இது போன்ற சேவைகளில் தமிழில் இரண்டாவது மிகப்பெரிய எஸ்.எம்.எஸ் சேனல் இது.

ON TEACHERTN                      9870807070

JOIN TEACHERTN                 09219592195

TN KALVI

http://www.tnkalvi.com

ON TNKALVII                               9870807070

JOIN TN_KALVII                       09219592195

தமிழக ஆசிரியர் மன்றம்.

http://tntam.blogspot.in

ON TAM-NEWS                    9870807070

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்.

http://tiaskk.blogspot.in

ON tias-news              9870807070

தமிழக ஆசிரியர்.

http://www.tamilagaasiriyar.com

ON TAMILAGAASIRIYAR                 9870807070

JOIN tneducation                                     09219592195

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (கீழ்வேளூர் வட்டாரம்).

http://koottani.blogspot.in

ON KOOTTANI        9870807070

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (விருதுநகர் மாவட்டம்).

http://tnptfvirudhunagar.blogspot.in

ON Tnptfvnrdist         9870807070

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (கரூர் வட்டாரம்).

http://testfkarur.blogspot.in

ON KARURNEWS               9870807070

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (அனக்காவூர் வட்டாரம்).

http://www.testfanakkavoor.blogspot.in

ON koottaninews                    9870807070

பாடசாலை.

http://www.padasalai.net

ON PADASALAISMS                    9870807070

JOIN PADASALAISMS               09219592195

கீழ்காணும் வலைத்தளங்கள் எஸ்.எம்.எஸ் சேவைகளை அளிப்பதில்லை என்றாலும் பார்த்துப் பயன்பெற வேண்டிய பயனுள்ள வலைத்தளங்கள் ஆகும்.

TN Teachers’ Friendly Blog.

http://crsttp.blogspot.in

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்.

http://www.tngta.com

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

http://www.chennaitnptf.blogspot.in

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (வெள்ளக்கோவில் வட்டாரம்).

http://taakvellakovil.blogspot.in

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (க.பரமத்தி வட்டாரம்).

http://tnptfkparamathi.blogspot.in

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (எருமப்பட்டி வட்டாரம்).

http://tnptfery.blogspot.in

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (திருப்பூர்).

http://tnptfmani.blogspot.in

ஆசிரியர் கூட்டணி (தொட்டியம்)

http://www.testfthottiam.blogspot.in

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (அரியலூர் மாவட்டம்).

http://mastertestf.blogspot.in

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (நாகை மாவட்டம்).

http://www.testfnagai.blogspot.in

தமிழக ஆசிரியர் கூட்டணி (ஊத்தங்கரை வட்டாரம்).

http://takuthangarai.blogspot.in

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் (திருச்சி மாவட்டம்).

http://tnhspgta-trichy.blogspot.in

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் (திண்டுக்கல்).

http://dindigultnhspgta.blogspot.in

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் (கரூர் மாவட்டம்).

http://tnhspgtakarur.blogspot.in

ஆசிரியர் அரங்கம்.

http://aasiriyararangam.blogspot.in

பள்ளிக்கூடம்.

http://pallikoodamedn.blogspot.in

தமிழ்நாடு தனியார்பள்ளி ஆசிரியர் அலுவலர் கழகம்.

http://pstakk.blogspot.in

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்.

http://voiceoftata.blogspot.in

மேற்கண்ட தகவல்கள் ஆசிரிய நண்பர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே தொகுத்துத் தரப்பட்டுள்ளது. எந்த அமைப்பையும் முன்னிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. தகவல்களில் ஏதேனும் தவறுகள் இருப்பின் கருத்துரையில் தெரிவியுங்கள். உடன் திருத்திக் கொள்ளப்படும். இது தவிர தொடர்ந்து பராமரிக்கப்படும் பயனுள்ள தளங்கள் இப்பட்டியலில் விடுபட்டிருந்தால் தெரிவியுங்கள். பட்டியலில் அவை சேர்த்துக்கொள்ளப்படும்.

குறிப்பு

நீங்கள் ஆக்டிவேட் செய்துள்ள எஸ்.எம்.எஸ் சேவைகளில் சிலவற்றை நீங்கள் வேண்டாம் என்று முடிவு செய்தால் ஆக்டிவேட் செய்ய அனுப்பிய எஸ்.எம்.எஸ் இல் ON என்று டைப் செய்ததற்கு பதிலாக 0FF என்று டைப் செய்து (SMS ‘OFF <channel name>‘, to 9870807070) ஏற்கனவே எஸ்.எம்.எஸ் அனுப்பிய எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பவும்.

நன்றி

எந்தவிதமான பொருளாதார பலனும் இன்றி ஆசிரியர்களது நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு, மிகுந்த நேரத்தையும், உழைப்பையும் தந்து மேற்கண்ட வலைத்தளங்களை பராமரித்து வரும் அனைத்து ஆசிரியர்களுக்கும், நெஞ்சார நன்றி செலுத்துவதிலும், வாழ்த்துவதிலும் சாக்பீஸ் வலைப்பதிவு பெருமை கொள்கிறது.

Advertisements

50 thoughts on “பள்ளி ஆசிரியர்களுக்குப் பயனுள்ள எஸ்.எம்.எஸ் சேவைகள்

 1. என்னை தொடர்ந்து பதிவு எழுத ஊக்குவித்து வரும் எனது மனைவியின் பிறந்தநாளையொட்டி இப்பதிவை எழுதியதில் மிக மகிழ்கிறேன்.

  • தங்கள் மனந்திறந்த கருத்துரைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி. வாருங்கள் இணைந்தே இன்னும் முயற்சிப்போம். சாதிப்போம்.

 2. இந்த தொகுப்பில் தற்போது
  பாடசாலை
  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (திருப்பூர்).
  பள்ளிக்கூடம்.
  தமிழ்நாடு தனியார்பள்ளி ஆசிரியர் அலுவலர் கழகம்.
  தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்.

  ஆகிய வலைப்பதிவுகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் பயனுள்ள, தொடர்ந்து பராமரிக்கப்படும் வலைப்பதிவுகள் இருப்பின் நமக்குத் தெரிவியுங்கள். இணைத்துக் கொள்கிறோம்.

 3. திருச்செங்கோடு ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் எஸ்எம்எஸ் சேவையான TIRUCHENGODE
  திருநாவுக்கரசு அவர்களால் நடத்தப்படும் SSATAMILNADU
  மற்றும் முத்துப்பாண்டி அவர்களால் நடத்தப்படும் TNPTFMuthupandian
  ஆகிய சேவைகளும் இங்கே குறிப்பிடத்தக்கன

 4. பாடசாலை எங்களுக்கு பயனுள்ள்ள செய்திகளை அள்ளித்தருகிறது. தொடரட்டும் கல்விச்சேவை.
  – பெ. சுரேஷ்குமார் B.SC.,B.ED.,M.A(E).,M.A(Eco)
  பட்டதாரி ஆசிரியர்(கணிதம்)
  அ.உ.நி.பள்ளி, எடுத்தவாய்நத்தம் – 606207
  கைப்பேசி:9786966458

 5. பணிரெண்டாம் வகுப்புக்கு முக்கிய வினா விடை தொகுத்து வெளியிட்டால் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.

 6. அய்யா ,
  தற்போது நடைப்பெற்ற பணிரெண்டாம் வகுப்பு மற்றும் நடைப்பெற இருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வினாக்களின் தொகுப்பை விடையுடன் வெளியிடுவீர்களா ?

 7. சார் உண்மையில் இது மிகவும் பயனுள்ள தளம், உங்கள் சேவைக்கு நன்றி.
  ….JKM
  GHSS-VILANDAI.

 8. அருமையிலும் அருமை இது போன்றே கல்வி சார் புத்தக மதிப்புரைகளையும் நல்ல புத்தக அறிமுகமும் செய்வீர்.

 9. இது ஒரு சிறந்த வலைபதிவு …..வாழ்த்துக்கள்….தொடர்ந்து செயல்படுங்கள்….சிறுபான்மை பள்ளிகளுக்கான விதிகள் இருந்தால் தாருங்கள்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s