கணினித் தமிழ் வளர்ச்சியின் முன்னோடி ஆண்டோ பீட்டர் மரணம். நமது அதிர்ச்சியும் அஞ்சலியும்!

கணினித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், சி.எஸ்.சி, சாப்டுவியூ நிறுவனத்தின் நிறுவனரும்,கணினித் தமிழ்ச்சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும், பலநூல்களின் ஆசிரியருமான மா.ஆண்டோபீட்டர்  12.07.2012 அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் இயற்கை எய்தினார்.

அவர் தந்தை பெரியார் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

உத்தமம் என்ற அமைப்பில் இணைந்து பணிபுரிந்தவர்.

மா.ஆண்டோபீட்டர் வாழ்க்கைக்குறிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் 26.04.1967 இல் பிறந்தவர்.

இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.

கணினி,இணையம்,அச்சத்துறை சார்ந்த பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். மென்பொருள் தயாரிப்பு, இணையப்பக்கம் வடிவமைப்பில் ஈடுபட்டவர்.

இவரின் மறைவு தமிழ் இணையத்துறைக்குப் பேரிழப்பு என்று பல்துறையினர் வெளியிட்டுள்ள இரங்கலில் தெரிவித்துள்ளனர்.

தமிழில் கம்ப்யூட்டர் குறித்த விழிப்புணர்வை தமிழர்களிடையே அதிகப்படுத்திய ஒரு முன்னோடியாக ஆண்டோ பீட்டர் பார்க்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

நன்றி பிபிசி செய்தி

என்னைப் போன்று ஆயிரக்கணக்கானோருக்கு தமிழில் கணினியை அறிமுகம் செய்து வைத்த, கணினி வரைகலைக்கும், தமிழ் கணினி வளர்ச்சிக்கும் அதிக பங்களித்த அன்னாரின் மறைவுக்கு நமது ஆழ்ந்த அதிர்ச்சியையும், அன்னாரது குடும்பத்துக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தொடர்புடைய பிற நண்பர்களது பதிவுகள்.

செல்வக்குமார்

http://selvaspeaking.blogspot.in/2012/07/blog-post_13.html

நக்கீரன் பத்திரிக்கை தளம்

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=78963

திருத்தமிழ்

http://thirutamil.blogspot.in/2012/07/blog-post.html

Advertisements

3 thoughts on “கணினித் தமிழ் வளர்ச்சியின் முன்னோடி ஆண்டோ பீட்டர் மரணம். நமது அதிர்ச்சியும் அஞ்சலியும்!

  1. செய்தித் தாளில் மறைவு பற்றிய செய்தி பார்த்த போது தமிழ் கணினி உலகம் ஒரு நல்ல பங்களிப்பாளரை இழந்து விட்டது என்பது புரிந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s