போட்டித் தேர்வு எழுதுவோர்க்கு அவசியமான இணையதளம்

நீங்கள் ஏதேனும் போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்காகத்தான் இந்த இணையதளம்.

எந்த போட்டித் தேர்வாக இருந்தாலும் அதில் முக்கியமான பகுதியாக இருப்பது நமது மனப்பாங்கையும், காரண அறிவையும் மதிப்பிடும் ஆப்டிட்யூட் மற்றும் ரீசனிங் வகைக் கேள்விகள் தான். அப்பகுதிகளில் உங்களை எக்ஸ்பர்ட் ஆக்குவதற்காகவே இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் உங்களைப் போட்டித் தேர்வில் நிச்சயம் வெல்ல வைக்க உதவும் பல வசதிகளை உள்ளடக்கியதாக இத்தளம் உள்ளது.

இத்தளத்தில் ஆப்டிட்யூட், ரீசனிங், வெர்பல் எபிலிட்டி, பொது அறிவு மற்றும் புதிர்கள் போன்ற பல பிரிவுகளின் கீழ் வினாக்கள் (சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் வகை) தொகுக்கப்பட்டுள்ளன. விடைகள் விரிவான குறிப்புடன் தரப்பட்டுள்ளது, பயனுடையதாக இருக்கிறது.

ஒவ்வொரு வினாவையும் செய்து பார்ப்பதற்கு, வினாக்களுக்கு அருகிலேயே இடம் (டெக்ஸ்ட் பாக்ஸ்) தரப்பட்டுள்ளது. மேலும் கணக்குகளை செய்து பார்ப்பதற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆன்லைன் கால்குலேட்டரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வினாக்களில் ஏதேனும் தவறுகள் இருப்பதாகத் தோன்றினால், ரிப்போர்ட் செய்யும் வசதியும் ஒவ்வொரு வினாவுடன் இணைக்கப்பட்டுள்ளது இத்தளத்தின் சிறப்பாகும். இதனால் இங்கு தரப்படும் வினாக்களில் தவறுகள் இருந்தாலும் (பொதுவாக இருப்பதில்லை) அவை பார்வையாளர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டு உடன் சரிசெய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன. சிறப்பு வசதியாக, ஒவ்வொரு வினாவைப் பற்றியும் குழுவில் விவாதிப்பதற்கும் இங்கு வசதிகள் உள்ளன.

பொது அறிவு வினாக்களும் சிறப்பாக உள்ளன. இது இந்திய வலைத்தளம் என்பதால் பொது அறிவுப் பகுதிகள் நம் நாட்டு போட்டித் தேர்வுகளில் கேட்கப்படுபவையாக உள்ளன. இது மட்டுமன்றி கணினி, பொறியியல் மற்றும் மருத்துவம் சார்ந்த போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக, அந்தந்த துறைசார்ந்த வினாக்களும் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

Common Aptitude Test (CAT),Bank Competitive Exam, UPSC Competitive Exams, SSC Competitive Exams, Defence Competitive Exams, L.I.C/ G. I.C Competitive Exams, Railway Competitive Exam, University Grants Commission (UGC), Career Aptitude Test (IT Companies) போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுடையதாக இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மற்றுமொரு சிறப்பான பகுதியாக, நேர்முகத் தேர்வுகளில் பொதுவாக கேட்கப்படும் வினாக்கள் விடைக்குறிப்புகளுடன் தரப்பட்டுள்ளன. குழுவிவாதத்தில் பொதுவாக கேட்கப்படும் கேள்விகளும் இங்கு தொகுக்கப்பட்டு விரிவான விடைக்குறிப்புகள் தரப்பட்டுள்ளன.

இது மட்டும் போதுமா என்ன? நாம் எப்படி தேர்வுக்கு தயாராகியிருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள, நமது அடைவை மதிப்பிட ஆன்லைன் தேர்வுகளும் இத்தளத்தில் தரப்பட்டுள்ளன.

“இனிமேல் என்னதான் தேவை?” எனத் தோன்றும் வகையில் அனைத்து வசதிகளும் இத்தளத்தில் தரப்பட்டுள்ளன. இத்தளத்தை பயன்படுத்தி நீங்கள் ஜமாய்க்க வேண்டியது தான் பாக்கி. இனிமேல் போட்டித் தேர்வுகளில் உங்களுக்கு யார் போட்டி?

வலைத்தள முகவரி: http://www.indiabix.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s