“ மனப்பாடம் செய்வோம் வாருங்கள்” என அழைக்கும் இணையதளம்.

இத்தளம் ஒரு வித்தியாசமான வசதியை வழங்குகிறது. நாம் மனப்பாடம் செய்ய வேண்டியவற்றை (ஆங்கிலத்தில்) எளிதில் மனப்பாடம் செய்ய இத்தளம் உதவுகிறது.

நாம் சிறு வயதில் ஆங்கிலக் கட்டுரையை மனனம் செய்கையில் நண்பன் ஒருவனிடம் புத்தகத்தை தந்து, “நான் ஒப்புவிக்கிறேன். பார்” என்போமே அது போலத்தான் இதுவும்.

இத்தளத்தில் நாம் மனப்பாடம் செய்ய வேண்டியவற்றை டைப் (அல்லது காப்பி அல்லது பேஸ்ட்) செய்து கொண்டு, நாம் மனப்பாடம் செய்ய ஆரம்பிக்கலாம்.Image

மனனம் செய்ய வேண்டிய பத்தியை ஒரு முறை படித்து விட்டு, இதில் உள்ள நெக்ஸ்ட் ஆரோவை அழுத்தினால், நமது பத்தியில் உள்ள சில வார்த்தைகள் மறைந்து அவ்விடத்தில் கோடுகள் காட்சியளிக்கின்றன. இப்பொழுது ஏற்கனவே நீங்கள் படித்ததை நினைவுக்கு கொண்டு வர முடிகிறதா? என்று பாருங்கள். Image

கோடுகள் உள்ள இடத்தில் உள்ளவற்றை உங்களால் நினைவுக்கு கொண்டு வர இயலவில்லை எனில், அவ்விடத்தில் கிளிக் செய்தால், அவ்வார்த்தைகள் காட்சியளிக்கின்றன. இப்பொழுது உங்களால் கோடிட்ட இடங்களில் உள்ள எல்லா வார்த்தைகளையும் நினைவில் கொண்டு வர முடிகிறதா? வெரி குட்! அடுத்து மீண்டும் நெக்ஸ்ட் ஆரோவை அழுத்தினால், மேலும் சில வார்த்தைகள் மறைந்து கோடுகள் தெரிய ஆரம்பிக்கின்றன.

இப்படியாக படிப்படியாக வார்த்தைகள் குறைக்கப்பட்டு, கடைசியில் கோடுகள் மட்டுமே தெரிய ஆரம்பிக்கும். இந்நிலையில் நீங்கள் கண்டிப்பாக அப்பத்தியை மனப்பாடம் செய்து முடித்திருப்பபீர்கள்.

அப்புறமென்ன! இனி மனனம் செய்வது ஈஸியோ! ஈஸி!!

வலைத்தள முகவரி: http://www.memorizenow.com

 

Advertisements

One thought on ““ மனப்பாடம் செய்வோம் வாருங்கள்” என அழைக்கும் இணையதளம்.

  1. நண்பர் பிரபாகரனுக்கு, நமது நன்றிகளும், ஒரு வேண்டுகோளும்!
    நமது பதிவுகளை தொடர்ந்து வாசித்து தாங்கள், தரும் கருத்துக்கள், நமக்கு பயனுடையதாகவும், தொடர்ந்து எழுத ஊக்குவிப்பதாகவும் உள்ளன. தங்களது வாழ்த்துக்களுக்கு எமது நன்றிகள்.
    தங்களது கருத்துக்களை செல்பேசி குறுந்தகவலாக அனுப்பாமல், வலைத்தளத்திலேயே பதிவு செய்தால், மேலும் பயனுடையதாகவும், நீண்ட நாட்கள் நீடித்திருப்பதாகவும் இருக்கும். தங்களது கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s