கணினித் தமிழ் வளர்ச்சியின் முன்னோடி ஆண்டோ பீட்டர் மரணம். நமது அதிர்ச்சியும் அஞ்சலியும்!

கணினித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், சி.எஸ்.சி, சாப்டுவியூ நிறுவனத்தின் நிறுவனரும்,கணினித் தமிழ்ச்சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும், பலநூல்களின் ஆசிரியருமான மா.ஆண்டோபீட்டர்  12.07.2012 அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் இயற்கை எய்தினார். அவர் தந்தை பெரியார் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். உத்தமம் என்ற அமைப்பில் இணைந்து பணிபுரிந்தவர். மா.ஆண்டோபீட்டர் வாழ்க்கைக்குறிப்பு தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் 26.04.1967 இல் பிறந்தவர். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். கணினி,இணையம்,அச்சத்துறை சார்ந்த பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். மென்பொருள் தயாரிப்பு, இணையப்பக்கம் வடிவமைப்பில்…

போட்டித் தேர்வு எழுதுவோர்க்கு அவசியமான இணையதளம்

நீங்கள் ஏதேனும் போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்காகத்தான் இந்த இணையதளம். எந்த போட்டித் தேர்வாக இருந்தாலும் அதில் முக்கியமான பகுதியாக இருப்பது நமது மனப்பாங்கையும், காரண அறிவையும் மதிப்பிடும் ஆப்டிட்யூட் மற்றும் ரீசனிங் வகைக் கேள்விகள் தான். அப்பகுதிகளில் உங்களை எக்ஸ்பர்ட் ஆக்குவதற்காகவே இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் உங்களைப் போட்டித் தேர்வில் நிச்சயம் வெல்ல வைக்க உதவும் பல வசதிகளை உள்ளடக்கியதாக இத்தளம் உள்ளது. இத்தளத்தில் ஆப்டிட்யூட், ரீசனிங், வெர்பல் எபிலிட்டி, பொது அறிவு…

“ மனப்பாடம் செய்வோம் வாருங்கள்” என அழைக்கும் இணையதளம்.

இத்தளம் ஒரு வித்தியாசமான வசதியை வழங்குகிறது. நாம் மனப்பாடம் செய்ய வேண்டியவற்றை (ஆங்கிலத்தில்) எளிதில் மனப்பாடம் செய்ய இத்தளம் உதவுகிறது. நாம் சிறு வயதில் ஆங்கிலக் கட்டுரையை மனனம் செய்கையில் நண்பன் ஒருவனிடம் புத்தகத்தை தந்து, “நான் ஒப்புவிக்கிறேன். பார்” என்போமே அது போலத்தான் இதுவும். இத்தளத்தில் நாம் மனப்பாடம் செய்ய வேண்டியவற்றை டைப் (அல்லது காப்பி அல்லது பேஸ்ட்) செய்து கொண்டு, நாம் மனப்பாடம் செய்ய ஆரம்பிக்கலாம். மனனம் செய்ய வேண்டிய பத்தியை ஒரு முறை…

Originally posted on Cybersimman\'s Blog:
ரீட் எனி புக்,லிட்பை உள்ளிட்ட இணையத்திலேயே புத்தகங்களை வாசிக்க உதவும் இணையதளங்கள் மற்றும் அவற்றின் சிறப்புகள் பற்றி உற்சாகம் பொங்க எழுதி வருகிறேன்.இந்த பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் பலரும் கேட்கும் கேள்வி தமிழில் இதே போல இ புக் வடிவில் புத்தகங்களை வாசிக்க உதவும் தளங்கள் எவை என்பது தான்? ஆர்வத்தோடு கேட்கப்படும் இந்த கேள்விக்கு உற்சாகமாக சுட்டிக்காட்டக்கூடிய வகையில் ஒரு இணையதளம் அறிமுகமாகியுள்ளது.இந்த தளத்தை சுட்டிக்காட்டிய…