சூப்பர் மார்க்சீட்டும், உங்கள் பள்ளியின் பொதுத்தேர்வு முடிவுகளும்!

த்தாம் வகுப்பு மற்றும் பன்னிரன்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்து விட்டன. பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் சரி! தங்களது (தங்கள் பிள்ளைகளது) மதிப்பெண்களை அலசி ஆராய்வதில் உள்ள சுகமே அலாதியானது தான். அந்த சுகத்தை அதிகப்படுத்தத்தான் ரிப்போர்ட் பீ எனும் இந்த இணையதளம்.

பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரன்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எண்ணை இத்தளத்தில் தந்து விட்டால் போதும், உங்கள் மதிப்பெண்ணை அலசி ஆராய்ந்து ஒரு மார்க்சீட்டை உங்களுக்குத் தருகிறது. அதில் பாடவாரியாக மாநில,மாவட்ட மற்றும் பள்ளிச் சராசரியுடன் உங்களது மதிப்பெண்களை ஒப்பீட்டு அலசித் தருகிறது.

மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவனின் மதிப்பெண்கள்

இது போதாது இன்னும் அக்குவேறாக, ஆணிவேறாக அலச வேண்டும் என்றாலும் ரூ.250 பெற்றுக்கொண்டு கீழ்காணும் படத்தில் உள்ளது போல ஒரு சூப்பர் மார்க்சீட்டைத் தருகிறது. இதில் மாநில, மாவட்ட,பள்ளி அளவில் மாணவன் பெற்ற இடத்தைக் குறிப்பிடுகிறது. இது தவிர பல தகவல்களையும் தருகிறது.


குறிப்பாக ஒரு பள்ளியின் பொதுத் தேர்வு முடிவுகளை மிகச் சிறப்பாக இலவசமாக அலசித் தருகிறது. அப்பள்ளியின் பாடவாரியாக மாணவர்களின் சராசரி மதிப்பெண்கள் மற்றும்  ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதம், சிறப்புத் தேர்ச்சியடைந்தவர்கள் மற்றும் சதமடித்தவர்களின் எண்ணிக்கை, பள்ளியில் முதல் ஐந்து இடம் பெற்றவர்கள் என பல விவரங்களைத் தருகிறது.

நமக்குத் தெரிந்த பள்ளிகளின் பொதுத்தேர்வு முடிவுகளை பார்ப்பது மிக சுவாரஸ்யமாக இருக்கிறது.
மாவட்டங்கள் வாரியான அலசல்களையும் பார்க்க முடிகிறது. பார்த்துவிட்டு அவசியம் கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இத்தளம் தரும் வேறு சில கட்டண வசதிகளைக் காண இதோ இந்த காணொளி.

வலைத்தள இணைப்பு

http://www.reportbee.com

Advertisements

4 thoughts on “சூப்பர் மார்க்சீட்டும், உங்கள் பள்ளியின் பொதுத்தேர்வு முடிவுகளும்!

  1. அருமையான application இது. தெரியப்படுத்தியமைக்கு நன்றி.

    உங்கள் தளமும் unique-ஆக இருக்கிறது. இன்றைக்கு மிகவும் தேவையானது இது போன்றதொரு வலைத்தளம்.

    நன்றி.

  2. பயனுள்ள இணைய தள முகவரி. ஒவ்வொரு பள்ளியும், ஆசிரியரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது. கல்விசார் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள். இது உங்கள் பணிக்கு வெளியிலும் பணி செய்யும் ஆர்வத்தைக் காட்டுகிறது.

  3. Reblogged this on chalkpiece and commented:

    சென்ற ஆண்டு பொதுத்தேர்வு முடிவுகளின் போது நாம் பதிவிட்டிருந்ததை இங்கு மீள்பதிவாக வழங்குகிறோம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s