நிச்சயம் சொல்வோம்! நாளைய பள்ளிகள் இப்படியென்று!

Click to See the link

Click to See the link

சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற இச்சூழலில் கல்வி ஆர்வலர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலர் இந்த ஆதிக்கத்தை கவலையோடு நோக்குகின்றனர். ஆனால் இதை எப்படி மாணவர்களுக்கு பயனுடையதாக மாற்றலாம் என சிந்தித்தனர் சிலர்.

யோசித்துப் பாருங்கள்! கல்விப் பயனுடைய விஷயங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொள்ளும் ஆசிரியர் அவரது பதிவுகளை பின்தொடரும் மாணவர்கள். எவ்வளவு அருமையாக இருக்கும்.

ஆனாலும் இதில் சில பின்னடைவுகள் இருக்கின்றன. (தேவையற்ற விளம்பரங்கள், ஆசிரியர் மற்றும் நிர்வாகத்தின் முழுமையான மேலாண்மை இன்மை, காலப் போக்கில் ஆசிரியரை தவிர்த்து மாணவர்களே குழுவாக இயங்கக்கூடிய சூழல் எனப் பல)
இந்த பின்னடைவுகளை தவிர்த்து முழுமையாக கல்விக்கென தனிப்பட்ட சமூக வலைதளங்களை சில இணையதளங்கள் வழங்குகின்றன. Social Learning Collaboration என்றும் Learning Management System (LMS) என்றும் இவை அழைக்கப்படுகின்றன.

பள்ளி நிர்வாகமோ, ஆசிரியரோ இதில் தங்களை பதிவு செய்து கொண்டு தங்கள் மாணவர்களையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

தங்களது பாடம் சார்ந்த வீடியோக்கள் மற்றும் இணைய ரிசோர்ஸ்களை ஆசிரியர் எளிதில் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். பகிர்ந்தவற்றை பாடத்தலைப்பு வாரியாகவும் தொகுத்து வைத்துக் கொள்ளலாம்.

ஆசிரியர்கள் மாணவர்களுக்கான வீட்டுவேலைகள் மற்றும் ஒப்படைவுகளை இதன் வாயிலாகவே வழங்கலாம்.

மாணவர்களது கருத்துகளை கேட்டு அறியலாம். சந்தேகங்களுக்கு இதில் பதில் அளித்தால் மாணவர்கள் எந்நேரமும் இதனைப் பார்த்து சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம். பிற மாணவர்களுக்கும் எந்நேரமும் இது பயன்படும்.
இது தவிர ஆசிரியர்கள் தாமே உருவாக்கிய கல்வி சார்ந்த மெட்டீரியல்களையும் இதன்வாயிலாக பகிர்ந்து கொள்ளலாம் .கூகுள் டாக்ஸ் போன்றவற்றில் சேமித்து வைத்திருக்கும் பைல்களை பகிர்ந்து கொள்ளலாம்.

பள்ளி நிர்வாகம் தனது அறிவிப்புகளையும், செய்திகளையும் இதன் வாயிலாக தெரிவிக்கலாம். இவ்வகை சேவையை இலவசமாக வழங்கும் ஸ்கூலாஜியின் இணையதளத்தில் இதற்கான அறிமுக வீடியோவை அவசியம் பாருங்கள்.

பார்த்துவிட்டு தங்கள் கருத்துரைகளை அவசியம் தாருங்கள். ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசு பள்ளிகளுக்கு அரசே இணைய இணைப்பு வழங்கி வரும் இச்சூழலில், இது போன்ற அமைப்பிற்குள் நமது பள்ளிகள் கொண்டுவரப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று நாம் நம்புகிறோம். நீ்ங்கள்.?

(இது போன்ற சேவையை அளிக்கும் நிறுவனங்கள் மற்றும் தளங்கள் பற்றிய குறிப்புகள் வெளியிடப்பட இருக்கும் நமது புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s