கம்ப்யூட்டர் கலைடாஸ்கோப் !

சிறுவயதில் கோவில் திருவிழாக்களில் கலைடாஸ்கோப் வாங்கியிருக்கிறீர்களா! கண்ணாடித்துண்டுகள் மற்றும் வளையல் துண்டுகள் ஒளி எதிரொளிப்பு முறையில் ஏராளமான டிசைன்களை உருவாக்கும் கண்கொள்ளாக் காட்சியை ரசித்திருக்கிறீர்களா! இந்த வகையான டிசைன்கள் தொழில்முறையில் பல டிசைன்களை உருவாக்கப் பயன்படுவதாக அறிவியல் பாடப்புத்தகத்திலும் படித்திருப்போம்.இதே தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு பல அருமையான டிசைன்களை உருவாக்கித் தருகிறது இத்தளம். மாதிரி பேட்டர்னில் உள்ள ஸ்லைடரை நகர்த்த நகர்த்த நமது கண்ணுக்கு விரு்ந்தளிக்கும் பல அருமையான டிசைன்கள் உருவாக்கப்படுகின்றன. லட்சக்கணக்கான டிசைன்களைக் கண்டு ஆச்சரியத்தில்…

நாலு பேருக்கு சோறு போடுங்க! உங்க கம்ப்யூட்டர்ல!!

படித்து ஒரு வேலைக்குச் சென்றபின் நம்மால் முடிந்த வரை ஏழைகளின் பசியை போக்குதல் சிறந்ததே! ஆனால் படிக்கும் போதே இதைச் செய்ய இயலுமா? முடியும் என்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உலக் உணவுத் திட்டத்தின் இத்தளம். என்ன செய்ய வேண்டும்? ஒன்றுமில்லை. இத்தளத்திற்கு சென்று உங்கள் ஆங்கில சொல்லடைவை வளர்க்கும் வண்ணம் உள்ள வினாக்களுக்கு பதிலளியுங்கள். உங்களது ஒவ்வொரு சரியான பதிலுக்கும் பத்து அரிசி மணிகள் ஏழைகளுக்கு வழங்கப்படுகிறது. நீங்கள் சரியான பதிலளிக்கையில் பக்கத்தில் உள்ள தட்டில்…

நிச்சயம் சொல்வோம்! நாளைய பள்ளிகள் இப்படியென்று!

சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற இச்சூழலில் கல்வி ஆர்வலர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலர் இந்த ஆதிக்கத்தை கவலையோடு நோக்குகின்றனர். ஆனால் இதை எப்படி மாணவர்களுக்கு பயனுடையதாக மாற்றலாம் என சிந்தித்தனர் சிலர். யோசித்துப் பாருங்கள்! கல்விப் பயனுடைய விஷயங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொள்ளும் ஆசிரியர் அவரது பதிவுகளை பின்தொடரும் மாணவர்கள். எவ்வளவு அருமையாக இருக்கும். ஆனாலும் இதில் சில பின்னடைவுகள் இருக்கின்றன. (தேவையற்ற விளம்பரங்கள், ஆசிரியர் மற்றும் நிர்வாகத்தின் முழுமையான மேலாண்மை…

கூட்டிக் கழித்து, பெருக்கி வகுக்க…

தொடக்கப்பள்ளி மாணவர்கள் கணிதத்தின் அடிப்படைச் செயல்பாடுளைப் புரிந்து கொண்டு பயிற்சி பெற பல இணையதளங்கள் உள்ளன. அவற்றுள் சிறப்பான தளமாக எக்ஸ்ட்ராமேத் எனும் இத்தளத்தைக் கருதுகிறேன். இத்தளத்தில் ஆசிரியரோ பெற்றோரோ பதிவு செய்து கொண்டு தங்கள் குழந்தைகளையும், மாணவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். மாணவர்கள் இதன் மூலம் பள்ளியிலோ, அல்லது வீட்டிலோ பயிற்சி மேற்கொள்ளலாம். மாணவர்களது முன்னேற்றம் குறித்த தகவல்கள் ஆசிரியருக்கும், பெற்றோருக்கும் வாரந்தோறும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படுகிறது. இது தவிர எந்நேரமும் பெற்றோரோ, ஆசிரியரோ, மாணவனின் முன்னேற்றம்…

கற்றல் கற்பித்தலுக்கான தொழில்நுட்பம்

இந்த வலைப்பதிவு கற்றல் கற்பித்தலுக்கான தொழில் நுட்பங்களுக்கான ஒரு வலைப்பதிவாகும். இதில் நாம் கற்றல் கற்பித்தல் சார்ந்த தொழில் நுட்பங்களையும் அது சார்ந்த சமீபத்திய செய்திகளையும் பார்க்க இருக்கிறோம். நாள்தோறும் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள், அது சார்நத மென்பொருள்கள் மற்றும் வலைதளங்கள் பற்றி பகிர்ந்து கொள்ள இருக்கிறோம். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மேலான ஆதரவை வேண்டுகிறோம்.