ஆரம்பம் நாங்களாக இருக்கலாம். முடிவு ….?

சிட்டுக்குருவி

சிட்டுக்குருவி

உலக சிட்டுக்குருவிகள் நாள் மார்ச் 20 ஐ ஒட்டி பறவை ஆர்வலர் திரு கல்பட்டு நடராஜன் ஐயா அவர்களின் தையல்காரப் பறவைகள் குறித்த வீடியோ பதிவையும் இங்கு நாம் காணுவது பொருத்தமாக இருக்கும்.

அறிவியல் தமிழ்மன்றம் தனது youtube channel மூலம் பல பயனுள்ள தமிழ் அறிவியல் வீடியோக்களை வழங்கி வருகிறது. பார்த்துவிட்டு கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

Picture Courtesy : http://commons.wikimedia.org

பிற பதிவர்களின் பதிவுகள்

இன்று உலக சிட்டுக் குருவிகள் தினம்

துளசி டீச்சரின் சிட்டுக்குருவி அனுபவங்கள்

குருவிகளைக் காணோம்?

சிட்டுக்குருவி தினம்

வானவில் ஔவையார் எழுத்துருவை தட்டச்சலாம் NHMல்…

தட்டச்சு தெரியாவிட்டாலும் தட்டச்சு செய்யலாம்! இனி வானவில் எழுத்துருவை!

நமது நண்பர் ஒருவரிடம் வானவில் ஔவையார் எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட்ட அலுவலக ரீதியிலான கோப்பு இருந்தது. அதில் சிறிய அளவில் மாற்றம் செய்ய வேண்டியிருந்த்து. ஆனால் அவரது கணினியில் வானவில் மென்பொருள் நிறுவப்பட்டிருக்கவில்லை. எழுத்துரு மட்டும் கோப்புடன் இணைத்து அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் கைகொடுத்த்து NHM ரைட்டர்.  எவ்வாறு என்று இங்கே நாம் பார்க்கலாம்.

தமிழக அரசு அலுவலகங்களிலும், கல்வித்துறையிலும் அலுவலக ரீதியிலான தகவல் தொடர்புகள் மற்றும் டாக்குமென்ட்களில் வானவில்-ஔவையார் எழுத்துரு பயன்படுத்தப்படுகிறது.

இது ஒரு தனியார் நிறுவனத்தின் எழுத்துரு ஆகும். இதனை தட்டச்சு செய்ய அவர்களது நிறுவனத்தின் மென்பொருளையே பயன்படுத்த வேண்டியிருக்கிறது. பொதுவாக இந்த மென்பொருளை வாங்குவதற்கு என்று அரசு அலுவலகங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதும் இல்லை. இதனால் அரசு அலுவலகங்கள் கிராக் செய்யப்பட்ட மென்பொருளையே சார்ந்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. கிராக் செய்யப்பட்ட மென்பொருளும் வின்டோஸ் 7 இயக்கச்சூழலில் வேலை செய்வது இல்லை.

வேறு இலவச மாற்று வழி இருப்பின் அரசு அலுவலகங்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும். என்.எச்.எம் ரைட்டர் இதற்கு மிகப் பெரிய தீர்வாக அமைந்துள்ளது. (ஆமாம்! யுனிகோடுக்கு மாற வேண்டியது தானே!)

என்.எச்.எம் ரைட்டரை வானவில் ஔவையார் எழுத்துருவை தட்டச்சு செய்ய பயன்படுத்துதல்.

என்.எச்.எம் ரைட்டரை http://software.nhm.in/products/writer என்ற இணைய இணைப்பிலிருந்து பதிவிறக்கிக் கொண்டு உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்.

என்.எச்.எம் ரைட்டரை துவக்கிக் கொள்ளுங்கள். உங்கள் கணினியின் சிஸ்டம் nhm_2ட்ரேயில் என்.எச்.எம் ரைட்டருக்கான குறியீட்டில் (மணி போன்ற அடையாளம்)nhm_1 ரைட்கிளிக் செய்யுங்கள். வரக்கூடிய மெனுவில் செட்டிங்ஸ் என்பதை செலக்ட் செய்யவும்.

தற்போது திரையில் தோன்றும் செட்டிங்ஸ் வின்டோவில் பல்வேறு வகையான தமிழ் எழுத்துரு வடிவங்களுக்கான, தமிழ் விசைப்பலகை முறைகள் தரப்பட்டுள்ளன. வானவில் எழுத்துருவிற்கான என்கோடிங்கிற்கும், விசைப்பலகை முறைகள் தரப்பட்டுள்ளதை கவனியுங்கள். இங்கு தமிழ்99, இன்ஸ்கிரிப்ட், பாமினி முறை, பழைய தட்டச்சு முறை, ஃபொனடிக் முறை ஆகிய விசைப்பலகைகள் தரப்பட்டுள்ளன. அதில் உங்களுக்கு பழக்கமான விசைப்பலகை முறையை தேர்வு செய்து கொள்ளுங்கள்.nhm_3 உதாரணத்திற்காக நாம் தமிழ்99 விசைப்பலகை முறையை தேர்வு செய்துள்ளோம். அதற்கான சுருக்கு விசையையும் நிர்ணயித்துக் கொண்டால் பயனுடையதாக இருக்கும்.

இப்போது மீண்டும் சிஸ்டம் டிரேயில் உள்ள என்.எச்.எம் குறியீட்டில் இடதுகிளிக் செய்தால் நீங்கள் தேர்வு செய்த விசைப்பலகை முறையும் இடம் பெற்றிருப்பதை nhm_4கவனிக்கலாம். அதனை செலக்ட் செய்து கொள்ளுங்கள. (நீங்கள் நிர்ணயித்துள்ள சுருக்கு விசையை அழுத்தியும் நீங்கள் நேரடியாக விசைப்பலகை முறையை தேர்வு செய்து கொள்ளலாம்.)

அவ்வளவு தான் நீங்கள் வானவில் எழுத்துருக்களை தட்டச்சு செய்ய தயாராகி விட்டீர்கள்.

அது சரி! எழுத்துருவிற்கு என்ன செய்வது என்று கேட்கறீர்களா? எழுத்துரு பொதுவாக அலுவலக ரீதியான டாக்குமென்ட்களை பகிர்ந்து கொள்ளும் போது இணைத்தே வழங்கப்படுகிறது. எளிதாக கிடைக்கிறது.

நாம் பரிசோதித்த வரையில் பழைய தட்டச்சுமுறையை விட, தமிழ்99 முறை சிறப்பாக செயல்படுகிறது. தட்டச்சு தெரியாதவர்கள் கூட ஃபொனடிக் முறையின் மூலம் தட்டச்சு செய்து கொள்ளலாம் என்பது இதன் தனிச்சிறப்பு.

ஆம் நண்பர்களே! இனிமேல் Windows 2003/XP/7 & Vista ஆகிய எந்த இயக்கமுறையிலும் நாம் எளிதாக, இலவசமாக வானவில் எழுத்துருக்களை தட்டச்சு செய்யலாம்.

அறிவியல்புரமும், நெஞ்சின் அலைகளும்.

தமிழில் அறிவியல் செய்திகளையும், கட்டுரைகளையும் வழங்கி வரும் முன்னணி வலைப்பதிவுகள் இரண்டினை நாம் இங்கு பார்க்கலாம்.

அறிவியல்புரம்

சிறந்த அறிவியல் எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற திரு என்.ராமதுரை அவர்களால் இவ்வலைப்பதிவு பராமரிக்கப்படுகிறது.

தமிழில் அறிவியல் செய்திகளை அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் இவ்வலைப்பதிவு விளக்குகிறது.

செய்திகளின் பின்னணியில் உள்ள அறிவியல் கருத்துகளை மிக எளிதாகவும், நேர்த்தியாகவும் விளக்கும் விதத்தில் இவ்வலைப்பதிவு முன்னணியில் உள்ளது.

முகவரி – http://www.ariviyal.in

ஆசிரியர் பற்றி

தினமணி நாளிதழின் செய்தி ஆசிரியராகவும், தினமணியின் அறிவியல் வார இணைப்பாக வெளிவந்த “தினமணி சுடரின்” பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார். தினமணியில் பல அறிவியல் மற்றும் பொதுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

சிறந்த அறிவியல் எழுத்தாளருக்கான தேசிய விருதைப் பெற்ற ராமதுரை, தமிழக அரசு மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் விருதுகளையும் பெற்றுள்ளார்.

சமீபத்திய பதிவுகள் சில.

அண்டார்டிகாவில் பாதாள் ஏரியில் நுண்ணுயிர்கள்

வியாழன் கிரகத்தைப் பார்க்க ஆசையா?

புதன் கிரகத்தில் ஐஸ் கட்டிகள்

செவ்வாய்க்கு இந்திய விண்கலம்: சீனாவை மிஞ்ச ஆசை

பூமியை மிரட்டும் விண்கற்களைக் கண்டுபிடிப்பதில் இந்தியாவின் பங்கு

எளிதில் புரியும்படியாக, அறிவியல் கருத்துக்களை தமிழில் வெளிப்படுத்துவதைத் தனது முக்கிய பணியாக நினைக்கும் ராமதுரை தொடர்ந்து எழுதி வருகிறார்.

அவரது வலைப்பதிவு தமிழில் கவுரவிக்கப்பட வேண்டிய வலைப்பதிவுகளில் ஒன்று.

நெஞ்சின் அலைகள்

ஓய்வு பெற்ற பின் எழுத்தையே முழு நேரக் கடமையாக்க் கருதி செயல்பட்டுவரும் அணுவிஞ்ஞானி சி. ஜெயபாரதன் அவர்களால் இவ்வலைப்பதிவு பராமரிக்கப்பட்டு வருகிறது.

தமிழில் இவ்வளவு விளக்கமான அறிவியல் கட்டுரைகள் வருகின்றனவா என இக்கட்டுரைகளை வாசிக்கும் எவரும் ஆச்சரியப்படும் விதத்தில் உள்ளன இவரது கட்டுரைகள்.

தமிழ் மீதான தீராத ஆர்வத்துடன் கவிதையில் ஆரம்பித்து இவர் எழுதும் அறிவியல் கட்டுரைகள் வேறெவரிடத்திலும் காண முடியாதவை.

கட்டுரைகளுக்கான தெளிவான விளக்கபடங்கள் மட்டுமல்லாது, நீண்ட பார்வைப்பட்டியலுடன் வெளிவருகின்ற இக்கட்டுரைகள் மூலமாக மிகச் சிறந்த ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.

முகவரி – http://jayabarathan.wordpress.com

ஆசிரியர் பற்றிjayabarathans-photo.jpg

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றபின் 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் பெரிய பதவிகளில் பணியாற்றி பின் கனடாவில் இயங்கும் கான்டு புரூஸ் அணுமின் நிலையத்திலும் சிலகாலம் பணியாற்றியிருக்கிறார்

சமீபத்திய சில பதிவுகள்

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பூர்வீக யுகத்தில் நிலவை முடுக்கி ஓட்டியது உள்ளிருந்த மின்காந்த உந்துசக்தியே

நாற்பது மில்லியன் ஆண்டுகட்கு முன்பு இந்தியா ஆசியாவுடன் மோதி இணைந்தது

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பதினேழு பில்லியன் பரிதிகள் பளுவில் உள்ள பூதப்பெரும் கருந்துளை கண்டுபிடிப்பு

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சுருள் நிபுலாவிலிருந்து (Helix Nebula) வெளியேறும் சூரிய மண்டல வடிவுள்ள அண்டத் துண்டுகள்

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : ஈர்ப்பு விசை என்பது ஒருவித மாயையாய் இருக்கலாம் !

இவ்வலைப்பதிவின் பள்ளி மற்றும் கல்லூரிப் பயன்பாடுகள் பல. அவசியம் ஆசிரியர்கள் அறிய வேண்டிய வலைப்பதிவு இது.

பிரபஞ்சத்தின் மகத்தான புதிர்களை அறிந்து கொள்ளவும், ஆனந்தமாய் அறிவியல்புரத்தில் உலா வரவும் அழைக்கும் இவ்வலைப்பதிவுகளைப் பயன்படுத்திப் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களிடமும் பகிர்ந்திடுவோம்.

அன்பைப் பகிர்ந்திட ஒரு கணித வழி

அன்பைப் பகிர்ந்திட பலவழிகள் இருப்பினும், இது கணிதம் சார்ந்த வழி. உங்கள் பொதுவான நண்பர்களுக்கோ, கணிதம் சார்ந்த நண்பர்களுக்கோ கூட அனுப்பலாம்.

https://www.desmos.com/mathogrammathlove  என்ற இணைப்பில் இதற்கான வழி உள்ளது. இங்கு படத்திலுள்ளவாறு வரைபடத்தாளில் பல இதய வடிவங்கள் கணித சமன்பாடுகளின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன.

நீங்கள் சமன்பாட்டின் a இன் மதிப்பினை அருகில் உள்ள சிலைடரின் மூலம் நகர்த்த ஆரம்பித்தால் வரைபடத்தாளில் இதயங்கள் நடனமாடுவது போன்ற கண்கவர் காட்சியை கண்டுகளிக்கலாம். இங்கு சொடுக்கவும்.

நீங்கள் சமன்பாடுகளில் மாற்றம் செய்து கூட விளைவுகளை பார்க்க முடிகிறது. இதுபோல இன்னும் சில டிசைன்களும் இத்தளத்தில் உள்ளன. நீங்களாகவும் உருவாக்கிக் கொள்ளலாம். அவற்றை மின்னஞ்சல் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.mathlove2இத்தளம் கணித உதவியுடன் பல வாழ்த்துச் செய்திகளை வரைபடங்களாக அனுப்ப உதவுகிறது. மாதிரிக்கு இதனையும் பாருங்கள்.

நன்றி – கணிதம் சார்ந்த பல கற்றல் கற்பித்தல் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வரும் http://colleenyoung.wordpress.com தளத்திற்கு.

மேற்படி மேத்தோகிராம் பயன்படுகிறதோ இல்லையோ அவசியம் Colleenyoung  அவர்களது தளத்திற்காவது சென்று வாருங்கள். கணிதம் சார்ந்த நவீன கற்பித்தல் நுட்பங்களை அறிமுகப்படுத்தும் தளங்களில் நாம் பின்பற்றக்கூடிய முதன்மையான தளம் இது.

அனைவர்க்கும் அறிவியல் – பிபிசியின் தமிழ் ஒலிக்கோர்வைகளை பதிவிறக்க

பிபிசி தமிழோசை

பிபிசியின் உலகசேவையிலிருந்து வழங்கப்படும் தமிழோசை வானொலி நிகழ்ச்சிக்கு அறிமுகம் தேவையில்லை. செய்திகளின் தரத்தாலும், தமிழ் உச்சரிப்பிற்காகவும் அந்த செய்தியறிக்கைக்கான நேயர்கள் ஏராளம்.

நேரடியாக வானொலி நிகழ்ச்சியை கேட்க முடியாவிட்டாலும் பிபிசியின் தமிழ் இணைய தளத்தில் எப்போது வேண்டுமானாலும் நிகழ்ச்சியை கேட்டு மகிழ முடிகிறது.

அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சிAnaivarkkum Ariviyal

தமிழோசை நிகழ்ச்சியில் வாரம் ஒரு முறை அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அநேகமாக தமிழில் அறிவியல் செய்திகளை முந்தித் தருவது அந்நிகழ்ச்சியாகவே இருக்கும். பிபிசி தமிழோசையில் அச்செய்தி வந்த பின்னரே பிற தமிழ் நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களில் வருவதை பல சமயம் காணமுடிகிறது.

இலவசமாக பதிவிறக்க

மற்றுமொரு புதிய வசதியாக பிபிசி,  அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சிக்கான ஒலிக்கோர்வைகளை (podcasts) இலவசமாக பதிவிறக்க வழிவகை செய்துள்ளது. பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைச் சொடுக்கவும். (http://www.bbc.co.uk/podcasts/series/ariviyal)

பள்ளிகளில் இதற்கான பயன்பாடுகள் பல. குறிப்பாக அறிவியல் ஆசிரியர்களுக்கு இந்த ஒலிக்கோர்வைகள் அதிகம் பயன்படக்கூடும். காலை வழிபாட்டுக் கூட்டங்களில் செய்தி வாசிப்பினிடையே இந்த ஒலிக்கோர்வைகளை பயன்படுத்திக் கொள்ள இயலும்.  ஆசிரிய, மாணவ சமூகம் பயன்படுத்திப் பயன்பெற வேண்டுகிறோம்.

மாணவர்களுக்கென்று ஒரு நாட்காட்டி

Calendar for Student

தினசரி நாம் காலண்டர்களை பார்க்கிறோமோ இல்லையோ, அவை நம் வீட்டில் வருடந்தோறும் இடம் பிடித்து விடுகின்றன. சிலருக்கு அதில் உள்ள தினசரி ராசிபலன்களைப் பார்ப்பதே காலையில் முதல் வேலை. இன்னும் சிலருக்கு அதில் உள்ள பொன்மொழிகளைப் படிக்க விருப்பம். இன்னும் சிலர் வீடுகளில் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு நாட்கள் கிழிக்கப்படாமலோ, அல்லது மாதங்கள் திருப்பப்படாமலோ இருக்கும். ஆனாலும் எப்படியோ காலண்டர்கள் இல்லாத வீடுகள் இல்லை.

காலண்டர்களுக்கான சாத்தியங்கள் பல. சுவரில் தொங்குகின்ற பஞ்சாங்கமாக மட்டுன்றி அதனை இன்னும் பல விதங்களில் பயன்படுத்த முடியும்.  அதன் வடிவமைப்பு மற்றும் உள்ளடக்கத்தில் பல பரிசோதனை முயற்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்திருக்கின்றன.

அந்த வகையில் மாணவர்களுக்கென்று பிரத்யேகமான “ மாணவர் நாட்காட்டி” ஒன்றை பிரியம் மீடியா என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது. மாத நாட்காட்டியான இதில் மாணவர்கள் சார்ந்த விஷயங்கள் பிரதானமாக இடம் பெற்றுள்ளன.

  • முக்கிய சர்வதேச தினங்கள்,
  • தேசிய தினங்கள்,
  • முக்கிய தலைவர்களது பிறந்த நாள்கள்,
  • அறிவியல் அறிஞர்களின் பிறந்த நாள்கள்,
  • ஒவ்வொரு நாளுக்குமான சிறப்புகள்,
  • உலகின் முக்கிய நிகழ்வுகள்

ஆகியவை தொகுக்கப்பட்டு பொருத்தமான வண்ணப்படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன.  அத்துடன் சுயமுன்னேற்ற வாசகம் ஒன்றும் மேற்புறத்தில் பொருத்தமான வடிவமைப்புடன் தரப்பட்டுள்ளது.

பொது அறிவு மற்றும் போட்டித் தேர்வுகளுக்குப் பயனுடையதாக இருக்கும். வகுப்பறைச் சூழலில் இதனைப் பல விதங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதனைப் பயன்படுத்திப் பயனடையுமாறு வேண்டுகிறோம்.

இந்த பரிசோதனை முயற்சிக்கு மட்டுமல்ல, தொடர்ந்து கல்வி சார்ந்த பரிசோதனை முயற்சிகள் யாருடையதாக இருந்தாலும், ஆதரவு அளித்து ஊக்கப்படுத்துவோம்.

தொடர்பு முகவரி

பிரியம் மீடியா, 17/9 – சாய்கிருஷ்ணா நகர்,
டபீர் கிழக்கு, கும்பகோணம் – 612001.
priyammediatech@yahoo.in

காலண்டரின் விலை ருபாய் 55.

காலண்டரின் விலையை  மேற்கண்ட முகவரிக்கு அனுப்பினால், தபால் செலவின்றி காலண்டரை அனுப்பி வைக்கிறார்கள். ஆசிரிய, மாணவ சமுகம் பயன்படுத்திப் பயனடையுமாறு வேண்டுகிறோம்.

பத்தாம் வகுப்பு – அறிவியல் – வெற்றியை உறுதி செய்யும் முக்கிய வினாக்கள்

இந்த கையேடு தமிழகப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அறிவியல் பாடத்தில் வெற்றியை உறுதிசெய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. நிறைய மதிப்பெண்கள் பெறுவதற்கும் இக்கையேடு துணைபுரியும். முக்கிய மற்றும் முந்தைய அரசுத்தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் தொகுக்கப்பட்டு உள்ளன. தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்காக இக்கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் இரு மதிப்பெண் வினாக்கள் எல்லாப் பாடங்களுக்கும் தரப்பட்டுள்ளது. ஐந்து மதிப்பெண் வினாக்கள் முக்கிய பாடங்களுக்கு தரப்பட்டுள்ளன.

அவசியம் இக்கையேட்டைப் படியுங்கள். உங்கள் வெற்றியை உறுதி செய்யுங்கள்.

Booklet வடிவம்.

மாணவர்கள் எளிதாக கையாளுவதற்காக இந்த இணைப்பில் நாம் இதனை புக்லெட் வடிவில் வடிவமைத்துள்ளோம்.

அதாவது ஏ4 அளவு காகிதங்களில் முன்னும், பின்னும் பிரிண்ட் எடுத்து, வரிசையாக அடுக்கி, பாதியாக மடக்கி தைத்தால் (Stapler pin அடித்தால்) உங்களுக்கு ஏ5 அளவில் புக்லெட் கிடைக்கும். கையாள எளிதாக இருக்கும். புக்லெட் வடிவிற்கு இங்கு சொடுக்குக (Recommended)

வேறெங்கே நான் செல்ல?…

Say No to Crackers

அனைவருக்கும் நமது வலைப்பதிவின் சார்பாக தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். பட்டாசுகளைத் தவிர்த்து, மகிழ்ச்சியாக பண்டிகைகளை கொண்டாடுவோம். இயற்கையைப் பாதுகாப்போம். என்ற ஆர்வத்தில் தொடர்ந்து நாம் வடிவமைத்துள்ள நான்காவது பதாகை இது.

நாம் ஏற்கனவே பதிவிட்ட மூன்று பதாகைகளுக்கும் வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கும், சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டு பலரைச் சென்றடைய வழிவகுத்த நண்பர்களுக்கும் நமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைவருக்கும் மற்றுமொரு முறை தீபாவளி வாழ்த்துக்கள்.

தொடர்புடைய பதிவுகள்-

ஒரு மரணத்தைக் கொண்டாட, தேவையா இத்தனை மரணங்கள்.

தீபங்களின் அணிவரிசையாய் மலரட்டும்.

பண்டிகை எதுவாயினும் வேண்டாமே பட்டாசு!

பட்டாசு – குறும்படம்.

 

பட்டாசு – குறும்படம்

தொடர்ந்த நமது தேடலில் பட்டாசு என்ற இந்த குறும்படம் சிக்கியது. இலங்கையில் எடுக்கப்பட்ட தமிழ்ப்படம் இது. இதன் இயக்குநர் த.ஷமிதன் அவர்கள் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களை மானசீகக்குருவாக ஏற்றுக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பத்து நிமிட இக்குறும்படம் பட்டாசு பற்றிய தனது கருத்தை வலுவாகக் கூறியிருக்கிறது. படத்தை பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன். இயக்குநருக்கு நமது வலைப்பதிவின் சார்பாக பாராட்டுக்களும், நன்றிகளும் உரித்தாகுக.

தொடர்புடைய நமது பிற பதிவுகள்.

ஒரு மரணத்தைக் கொண்டாட, தேவையா இத்தனை மரணங்கள்?

தீபங்களின் அணிவரிசையாய் மலரட்டும் ….

பண்டிகை எதுவாயினும் வேண்டாமே பட்டாசு!

பண்டிகை எதுவாயினும் வேண்டாமே பட்டாசு!

Say No to Crackers

சென்ற பதிவில் கூறியபடி, பட்டாசுகளைத் தவிர்த்து, மகிழ்ச்சியாக பண்டிகைகளை கொண்டாடுவோம். இயற்கையைப் பாதுகாப்போம். என்ற ஆர்வத்தில் நாம் வடிவமைத்துள்ள மூன்றாவது பதாகை இது. மேலும் சிலவற்றை வடிவமைக்கும் ஆர்வமுள்ளது. வடிவமைத்தால் பகிர்ந்து கொள்கிறோம்.

இக்கருத்துகள் உங்களுக்கும் உடன்பாடு எனில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தங்கள் கருத்துக்களையும், இது போன்ற பதாகைகளுக்கான கருத்துருக்கள் ஏதேனும் இருப்பின் அவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தொடர்புடைய பதிவுகள்

ஒரு மரணத்தைக் கொண்டாட தேவையா இத்தனை மரணங்கள்.

தீபங்களின் அணிவரிசையாய் மலரட்டும் ….

கூகுள் தேடலின் போது இது தொடர்பாக கிடைத்த இந்த வீடியோவினை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.